twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி வயசு.. ஷ்ரியா வயசு.. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க, ஏவி.எம். தயாரிக்க உருவாகும் சிவாஜி படம் குறித்ததகவல்களை ஷங்கர் படு ரகசியமாக வைத்துள்ளார். சிவாஜி படப்பிடிப்பு நடக்கும் இடங்கள் எல்லாம் இரும்புக்கோட்டை போல இறுக்கமாக வைக்கப்பட்டிருந்தாலும் கூட சிவாஜி குறித்து இப்போது சில மேட்டர்கள் கசிந்துவருகின்றன.படம் வேகமாக வளர்ந்து வந்தாலும் முக்கியமான சில காட்சிகளை இன்னும் படமாக்காமல் வைத்துள்ளார் ஷங்கர்.இந்தக் காட்சிகள் அனைத்துமே ரஜினி மற்றும் மெயின் ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளாம்.ஷ்ரேயா தவிர இன்னொரு ஹீரோயினும் படத்தில் இருக்கிறார் என்பது பழைய சேதி. அதில் நடிக்கப் போவது யார்என்பதில்தான் இன்னும் குழப்பமாம்.ஐஸ்வர்யா ராயிடம் இருந்து இன்னும் கால்ஷீட் குறித்த உத்தரவாதம் கிடைக்காமல் போனதால், ராணி முகர்ஜியிடம்பேசினார்கள். அதுவும் இன்னும் சரிப்பட்டு வரவில்லை என்கிறார்கள். ரஜினியின் கொடி பறக்குது படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் இயக்குனராக இருந்த மணிவண்ணன்.அதுவரை திரைக்குப் பின்னர் இருந்த மணிவண்ணனை அவரது குரு பாரதிராஜாதான் கொடி பறக்குது படம் மூலம்நடிக்க வைத்தவர்.அதில் ரஜினியின் வில்லனாக வந்திருப்பார் மணி. அடுத்து படையப்பாவில் ரஜினியுடன் இணைந்து நடித்தார்மணிவண்ணன். அதில் சிவாஜியின் தம்பியாக அதாவது ரஜினியின் சித்தப்பாவாக வந்திருப்பார். இப்போதுசிவாஜி படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடிக்கிறார் மணிவண்ணன்.ஒரு நாள் சூட்டிங்கின்போது திடீரென ஆயிரம் கிலோ மாட்டுக் கறி வேண்டும் என ஷங்கர் கேட்க,ஹைதராபாத்தை சுற்றிச் சுற்றி வந்தும் தேறாமல், ஊரை விட்டு வெளியே கார்களில், வேன்களில் பறந்து போய்அள்ளிக் கொண்டு வந்து தந்திருக்கிறார்கள். அப்படியும் 600 கிலோ தான் தேறியதாம்.இன்னொரு நாள் 1,000 குவாலிஸ் கார்களை ஷங்கர் கேட்க, அலைந்து திரிந்து சில மணி நேரத்தலேயே கொண்டுவந்து நிறுத்தினார்களாம் புரொடக்ஷன் ஆட்கள். படத்தில் முக்கியமான இன்னொரு கேரக்டர் சாலமன் பாப்பையா. பட்டிமன்ற தந்தை என பட்டிமன்ற வட்டாரத்தில்புகழப்படும் சாலமன் பாப்பையாவுக்கு இதில் கலக்கலான வேடமாம்.சிவாஜி சூட்டிங் ஸ்பாட்டில் தினமும் ரஜினிக்கு ஸ்ஷெல் உணவாக ஆட்டுக் குடல் குழம்பு தயாராகிறதாம். காரணம்,ரஜினிக்கு வயிற்றுப் புண் இருக்கிறதாம். அதை சரி செய்ய இந்த குழம்பை தினமும் சமைத்துத் தருவதுகோலிவுட்டின் பிரபலமான சமையல்காரரான மெஸ் ராமசாமி தான்.பாப்பையாவின் பட்டிமன்ற சிஷ்யர் ராஜா என்பவரும் இப்படத்தில் நடிக்கிறார். ஷ்ரேயாவின் அப்பா கேரக்டரில்.ரஜினிக்கு மாமனார் என்ற புகழை இதன் மூலம் ராஜா பெறுகிறார்!படத்தின் வில்லன் கேரக்டருக்கு சத்யராஜைக் கூப்பிட, அவர் நடிக்க மறுத்துவிட்டார். ராஜ்கிரணைக் கேட்க,அவரும் நோ சொல்லிவிட்டார். இப்போது அந்த கேரக்டருக்கு பிரகாஷ் ராஜ் பெயர் அடிபடுகிறது. பாபாவில்பாதியில் கோபித்துக் கொண்டு போனவர் பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினிக்கு அம்மா வேடத்தில் யாரைப் போடலாம் என பெரிய விவாதமே நடந்துள்ளது. கடைசியில் வடிவுக்கரசிமுடிவானாராம். (நல்லவேளை மீனாவைப் போடமல் விட்டார்கள்) அருணாச்சலத்தில் வில்லியாக வந்து ரஜினிரசிகர்களின் வாயில் விழுந்த வடிவுக்கரசி, சிவாஜியில் ரஜினி மீது பாசத்தைப் பொழியும் அம்மாவாக நடிக்கிறார்.படத்தில் இரண்டு ரஜினியாம். ஒருவர் ஏழையாக இருந்து பணக்காரராக உயரும் ரஜினி (இந்த பார்முலா இல்லாமல்ரஜினி படம் எடுப்பது கஷ்டம்). இந்த ரஜினி பென்ஸ் காரை மட்டுமே பயன்படுத்துவாராம். இதனால் படம் முழுக்கபுதுப் புது பென்ஸ் கார்கள் பவனி வருமாம்.சாதாரண ரஜினியாக வருபவரின் உருவத் தோற்றம், பழைய காலத்து ரஜினியை நினைவுபடுத்தும் வகையில்தலையில் வழுக்கையை மறைத்து பழைய ஹேர் ஸ்டைலைக் கொண்டு வந்திருக்கிறார்களாம்.இதுவரை இல்லாத அளவுக்கு பணத்தையும் அள்ளி வீசி வருகிறாராம் ஷங்கர். படம் ரிச்சாக இருக்க வேண்டும்என்பதற்காக வழக்கமாக யோசித்து பணத்தை வெளியில் விடும் ஏவி.எம்மும் எதுவும் லிமிட் வைத்துக்கொள்ளாமல் நல்லா எடுங்க போதும் என்று கூறி விட்டதாம். மோகன் லாலை ஒரு போலீஸ் ஆபிசர் ரோலில் நடிக்க கூப்பிட்டார்கள். ஆனால், 1 மாத கால்ஷீட் கேட்டதால்முடியாது என்று சொல்லிவிட்டார். இப்போது இந்த ரோலை ரஜினியின் மிக நெருங்கிய நண்பரான மோகன் பாபுசெய்வார் என்கிறார்கள்.சென்னையில் ரயில் நிலையத்தில் சில காட்சிகளை எடுத்த ஷங்கர், படத்தின் பெரும்பாலான காட்சிகளைதொடர்ந்து ஹைதராபாத்தில் சுட்டு வருகிறார். ரஜினி, விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே சென்னையில்படமாக்கப்பட்டுள்ளன.மேலும் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோல்டன் பீச்சுக்கு அருகே மிக பலத்த பாதுகாப்போடு ஒரு ஷாட்எடுத்தார்கள். கூட்டத்தை கண்ட்ரோல் செய்ய நூற்றுக்கணக்கான பிரைவேட் செக்யூரிட்டிகளை நிறுத்தி அதைஎடுத்தார்களாம்.பிட்டு: சூட்டிங்கில் பிரேக் கிடைத்தால் சென்னைக்கு வந்துவிடும் ரஜினி இப்போதெல்லாம் போயஸ் கார்டன்வீட்டை விட நீலாங்கரையில் கட்டியிருக்கும் தனது புதிய பண்ணை வீட்டில் தான் தங்குகிறார். கொரியன் புல் தரை,குடில்கள், நீச்சல் குளம், ஊஞ்சல் என இயற்கை ரம்மியத்துடன் கலக்கால இருக்கிறது இந்த இடம். இங்கு ரஜினியைபார்க்க வரும் விஐபிக்களுக்கு இளநீர் தான் கொடுக்கிறார்கள்.சூப்பர் பிட்டு: ரஜினிக்கு இப்போது வயது 56. அவருடன் ஜோடி போடும் ஷ்ரியாவுக்கும் ரஜினிக்கும் வயதுவித்தியாசம் 35 ஆண்டுகளாம்.

    By Staff
    |

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க, ஷங்கர் இயக்க, ஏவி.எம். தயாரிக்க உருவாகும் சிவாஜி படம் குறித்ததகவல்களை ஷங்கர் படு ரகசியமாக வைத்துள்ளார். சிவாஜி படப்பிடிப்பு நடக்கும் இடங்கள் எல்லாம் இரும்புக்கோட்டை போல இறுக்கமாக வைக்கப்பட்டிருந்தாலும் கூட சிவாஜி குறித்து இப்போது சில மேட்டர்கள் கசிந்துவருகின்றன.

    படம் வேகமாக வளர்ந்து வந்தாலும் முக்கியமான சில காட்சிகளை இன்னும் படமாக்காமல் வைத்துள்ளார் ஷங்கர்.இந்தக் காட்சிகள் அனைத்துமே ரஜினி மற்றும் மெயின் ஹீரோயின் சம்பந்தப்பட்ட காட்சிகளாம்.

    ஷ்ரேயா தவிர இன்னொரு ஹீரோயினும் படத்தில் இருக்கிறார் என்பது பழைய சேதி. அதில் நடிக்கப் போவது யார்என்பதில்தான் இன்னும் குழப்பமாம்.

    ஐஸ்வர்யா ராயிடம் இருந்து இன்னும் கால்ஷீட் குறித்த உத்தரவாதம் கிடைக்காமல் போனதால், ராணி முகர்ஜியிடம்பேசினார்கள். அதுவும் இன்னும் சரிப்பட்டு வரவில்லை என்கிறார்கள்.


    ரஜினியின் கொடி பறக்குது படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் இயக்குனராக இருந்த மணிவண்ணன்.அதுவரை திரைக்குப் பின்னர் இருந்த மணிவண்ணனை அவரது குரு பாரதிராஜாதான் கொடி பறக்குது படம் மூலம்நடிக்க வைத்தவர்.

    அதில் ரஜினியின் வில்லனாக வந்திருப்பார் மணி. அடுத்து படையப்பாவில் ரஜினியுடன் இணைந்து நடித்தார்மணிவண்ணன். அதில் சிவாஜியின் தம்பியாக அதாவது ரஜினியின் சித்தப்பாவாக வந்திருப்பார். இப்போதுசிவாஜி படத்தில் ரஜினிக்கு அப்பாவாக நடிக்கிறார் மணிவண்ணன்.

    ஒரு நாள் சூட்டிங்கின்போது திடீரென ஆயிரம் கிலோ மாட்டுக் கறி வேண்டும் என ஷங்கர் கேட்க,ஹைதராபாத்தை சுற்றிச் சுற்றி வந்தும் தேறாமல், ஊரை விட்டு வெளியே கார்களில், வேன்களில் பறந்து போய்அள்ளிக் கொண்டு வந்து தந்திருக்கிறார்கள். அப்படியும் 600 கிலோ தான் தேறியதாம்.

    இன்னொரு நாள் 1,000 குவாலிஸ் கார்களை ஷங்கர் கேட்க, அலைந்து திரிந்து சில மணி நேரத்தலேயே கொண்டுவந்து நிறுத்தினார்களாம் புரொடக்ஷன் ஆட்கள்.


    படத்தில் முக்கியமான இன்னொரு கேரக்டர் சாலமன் பாப்பையா. பட்டிமன்ற தந்தை என பட்டிமன்ற வட்டாரத்தில்புகழப்படும் சாலமன் பாப்பையாவுக்கு இதில் கலக்கலான வேடமாம்.

    சிவாஜி சூட்டிங் ஸ்பாட்டில் தினமும் ரஜினிக்கு ஸ்ஷெல் உணவாக ஆட்டுக் குடல் குழம்பு தயாராகிறதாம். காரணம்,ரஜினிக்கு வயிற்றுப் புண் இருக்கிறதாம். அதை சரி செய்ய இந்த குழம்பை தினமும் சமைத்துத் தருவதுகோலிவுட்டின் பிரபலமான சமையல்காரரான மெஸ் ராமசாமி தான்.

    பாப்பையாவின் பட்டிமன்ற சிஷ்யர் ராஜா என்பவரும் இப்படத்தில் நடிக்கிறார். ஷ்ரேயாவின் அப்பா கேரக்டரில்.ரஜினிக்கு மாமனார் என்ற புகழை இதன் மூலம் ராஜா பெறுகிறார்!

    படத்தின் வில்லன் கேரக்டருக்கு சத்யராஜைக் கூப்பிட, அவர் நடிக்க மறுத்துவிட்டார். ராஜ்கிரணைக் கேட்க,அவரும் நோ சொல்லிவிட்டார். இப்போது அந்த கேரக்டருக்கு பிரகாஷ் ராஜ் பெயர் அடிபடுகிறது. பாபாவில்பாதியில் கோபித்துக் கொண்டு போனவர் பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.


    ரஜினிக்கு அம்மா வேடத்தில் யாரைப் போடலாம் என பெரிய விவாதமே நடந்துள்ளது. கடைசியில் வடிவுக்கரசிமுடிவானாராம். (நல்லவேளை மீனாவைப் போடமல் விட்டார்கள்) அருணாச்சலத்தில் வில்லியாக வந்து ரஜினிரசிகர்களின் வாயில் விழுந்த வடிவுக்கரசி, சிவாஜியில் ரஜினி மீது பாசத்தைப் பொழியும் அம்மாவாக நடிக்கிறார்.

    படத்தில் இரண்டு ரஜினியாம். ஒருவர் ஏழையாக இருந்து பணக்காரராக உயரும் ரஜினி (இந்த பார்முலா இல்லாமல்ரஜினி படம் எடுப்பது கஷ்டம்). இந்த ரஜினி பென்ஸ் காரை மட்டுமே பயன்படுத்துவாராம். இதனால் படம் முழுக்கபுதுப் புது பென்ஸ் கார்கள் பவனி வருமாம்.

    சாதாரண ரஜினியாக வருபவரின் உருவத் தோற்றம், பழைய காலத்து ரஜினியை நினைவுபடுத்தும் வகையில்தலையில் வழுக்கையை மறைத்து பழைய ஹேர் ஸ்டைலைக் கொண்டு வந்திருக்கிறார்களாம்.

    இதுவரை இல்லாத அளவுக்கு பணத்தையும் அள்ளி வீசி வருகிறாராம் ஷங்கர். படம் ரிச்சாக இருக்க வேண்டும்என்பதற்காக வழக்கமாக யோசித்து பணத்தை வெளியில் விடும் ஏவி.எம்மும் எதுவும் லிமிட் வைத்துக்கொள்ளாமல் நல்லா எடுங்க போதும் என்று கூறி விட்டதாம்.


    மோகன் லாலை ஒரு போலீஸ் ஆபிசர் ரோலில் நடிக்க கூப்பிட்டார்கள். ஆனால், 1 மாத கால்ஷீட் கேட்டதால்முடியாது என்று சொல்லிவிட்டார். இப்போது இந்த ரோலை ரஜினியின் மிக நெருங்கிய நண்பரான மோகன் பாபுசெய்வார் என்கிறார்கள்.

    சென்னையில் ரயில் நிலையத்தில் சில காட்சிகளை எடுத்த ஷங்கர், படத்தின் பெரும்பாலான காட்சிகளைதொடர்ந்து ஹைதராபாத்தில் சுட்டு வருகிறார். ரஜினி, விவேக் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே சென்னையில்படமாக்கப்பட்டுள்ளன.

    மேலும் சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் கோல்டன் பீச்சுக்கு அருகே மிக பலத்த பாதுகாப்போடு ஒரு ஷாட்எடுத்தார்கள். கூட்டத்தை கண்ட்ரோல் செய்ய நூற்றுக்கணக்கான பிரைவேட் செக்யூரிட்டிகளை நிறுத்தி அதைஎடுத்தார்களாம்.

    பிட்டு: சூட்டிங்கில் பிரேக் கிடைத்தால் சென்னைக்கு வந்துவிடும் ரஜினி இப்போதெல்லாம் போயஸ் கார்டன்வீட்டை விட நீலாங்கரையில் கட்டியிருக்கும் தனது புதிய பண்ணை வீட்டில் தான் தங்குகிறார். கொரியன் புல் தரை,குடில்கள், நீச்சல் குளம், ஊஞ்சல் என இயற்கை ரம்மியத்துடன் கலக்கால இருக்கிறது இந்த இடம். இங்கு ரஜினியைபார்க்க வரும் விஐபிக்களுக்கு இளநீர் தான் கொடுக்கிறார்கள்.

    சூப்பர் பிட்டு: ரஜினிக்கு இப்போது வயது 56. அவருடன் ஜோடி போடும் ஷ்ரியாவுக்கும் ரஜினிக்கும் வயதுவித்தியாசம் 35 ஆண்டுகளாம்.

      Read more about: rajinis shivaji titbits
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X