ஹீரோ .. ஹீரோ ..
ஒருவழியாக சூப்பர் ஸ்டாரின் அடுத்த படம் முடிவாகி விட்டது. படத்திற்கு தூயவன் என்று பெயர்வைத்துள்ளார்கள்.
இந்தப் படத்தை பிரபல இந்தி மற்றும் தெலுங்குப் பட இயக்குநர் ராம் கோபால் வர்மா இயக்குகிறார். இந்தப்படத்தின் விவாதத்திற்காக ரஜினியின் கதை விவாதக் குழு மகாபலிபுரத்தில் மையமிட்டுள்ளது.
கதை, அரசியலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. ரஜினியின் கடைசிப் படமாக இதுஇருக்கக் கூடும் என்பதால், பாட்ஷா படத்தை விட அதிகபட்ச அளவில் ரஜினியை ஹைலைட் செய்யதிட்டமிட்டுள்ளார்கள்.
வியாழக்கிழமை நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலின் முடிவைப் பொறுத்து கதையின் ஓட்டத்தை மாற்றவும்திட்டமிட்டுள்ளார்கள். முடிவுகள் தெரிந்ததும், அய்யாவா, அம்மாவா என்பதைத் தெரிந்து கொண்டு, கதையின்போக்கு மாறலாம்.
ரஜினிக்காக சூப்பர் பாடல் ஒன்றை கவியரசு வைரமுத்து தீட்டியிருக்கிறார். படத்தின் பெரும்பலமாக இந்தப்பாடல் இருக்குமாம்.
இரண்டு கதாநாயகியர்கள் இந்தப் படத்தில். அதில் ஒருவராக உலக அழகி யுக்தா முகிமுடிவு செய்யப்பட்டுள்ளார்.மற்றவர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.


Click it and Unblock the Notifications











