ஹீரோ .. ஹீரோ ..

By Staff

நடிகர் சங்கத்தில் அரசியல் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதால் சங்கத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து விலகி விட ரஜினிதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அரசியல் கட்சிகளில் தீவிரமாக இருப்பவர்கள் நடிகர் சங்கப் பதவிகளில் இருந்து விலகிவிட வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார்.முதல்வர் ஜெயலலிதாவின் நெருக்குதலால் திமுக நடிகர்களை ஓரம் கட்டவே விஜய்காந்த் இந்தக் கருத்தைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து வரும் 30ம் தேதி நடிகர் சங்கத்தில் விவாதம் நடக்க உள்ளது.

அன்றைய தினம் தனது நடிகர் சங்க உறுப்பினர் பதவியில் இருந்து ரஜினி விலகலாம் என்று தெரிகிறது. நடிகர் சங்கமே அரசியல்கூடாரமாகிவிட்டதாகக் கூறியும், நான் நடிகனாகவே இருக்க விரும்புகிறேன் என்றும் ரஜினியிடம் இருந்து அறிக்கை வரலாம்.

ரஜினியைப் பின் பற்றி திமுக நடிகர்களான நெப்போலியன் தனது துணைத் தலைவர் பதவியில் இருந்தும், சரத்குமார் தனது பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகலாம் என்று கூறப்படுகிறது.

அதே போல சந்திரசேகர், தியாகு ஆகிய திமுக நடிகர்களும் செயற்குழு உறுப்பினர் பதவியைத் துறக்க முடிவு செய்துள்ளனர்.

அதிமுகவைச் சேர்ந்த எஸ்.எஸ். சந்திரன் என்ன செய்வார் என்று தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X