ஹீரோ .. ஹீரோ ..

By Staff

கமலுடன் இணைந்து நடிக்கத் தயார் என்று சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார்.

தெனாலி படத்தின் வெள்ளி விழா சென்னை ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள இமேஜ் கலையரங்கில் நடந்தது.இதில் ரஜினி காந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். படத்தில் நடித்த கமல், தேவயானி, ஜோதிகாஉள்ளிட்ட பலருக்கும் அவர் விருதுகளை வழங்கினார்.

விழாவில் கலந்து கொண்ட ரஜினிக்கும், கமலுக்கும், தெனாலி படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரானகே.எஸ்.ரவிக்குமார் வெள்ளி வேல் பரிசாக வழங்கினார்.

நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், ரஜினியும், கமலும் மீண்டும் சேர்ந்து நடிக்க வேண்டும்.பிரமாண்டமான அந்தப் படத்தை யார் வேண்டுமானாலும் இயக்கலாம், யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம்.ஆனால் கட்டாயம் அவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என்றார். இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார்பேசும்போதும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார்.

பின்னர் கமல் பேசும்போது, ரஜினியும், நானும் இணைந்து நடிக்க வேண்டும் என்று விருப்பம்தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபம் இல்லை. ரஜினி ரெடி என்றால் நானும் ரெடிதான்.முதலில் நல்ல கதை ரெடியாகட்டும். அதன் பிறகு இயக்குநர், மற்ற டெக்னீஷியன்கள் குறித்து முடிவுசெய்யலாம்.

நானும், ரஜினியும் சேர்ந்து நடிப்பது என்பது புதிதல்ல. ஏற்கனவே இருவரும் சேர்ந்து பல படங்களைக்கொடுத்துள்ளோம். அத்தனையும் பெரிதாக ஓடிய படங்கள் என்றார் கமல்.

பின்னர் ரஜினி பேசுகையில், கமல் சார், திரையுலகில் எனக்கு சீனியர். அவர் பார்த்து, நீ இந்தப் படத்தில் என்னுடன்நடி என்றால் நான் நடிக்கத் தயார்.

வயதில் வேண்டுமானால் அவரை விட நாலைந்து வயது மூத்தவனாக நான்இருக்கலாம். ஆனால் அனுபவத்தில் அவர்தான் சீனியர்.

கமலுடன் சேர்ந்து நடிக்க எனக்கும் ஆசைதான். திரையுலகில் ஒரு கொடுமை உண்டு. படத்தில் நடிக்க, நடிக்கநிம்மதி போய் விடுகிறது. நிம்மதிக்காக நடிக்க வந்தால் பணம் போய் விடும். நல்ல கதை இருந்தால் நடிக்கலாம்என்றார் ரஜினி.

விழாவில் கலந்து கொண்ட தேவயானியுடன் அவரது கணவர் ராஜகுமாரனும் வந்திருந்தார். விழாவில் அவர்பேசுகையில், திருமணத்திற்குப் பிறகு நான் கலந்து கொள்ளும் முதல் சினிமா நிகழ்ச்சி இதுதான். எனவேஅனைவரும் என்னை வாழ்த்த வேண்டும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X