ஹீரோ .. ஹீரோ ..
மாபெரும் அமைதியில் உறைந்திருந்த ரஜினி காந்த் தனது மெளனத்தைக் கலைத்துள்ளார். அடுத்த 2 வாரத்தில்அவரது புதிய படத்தின் படப்பிடிப்புசென்னை ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் துவங்குகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த்தின் ஒவ்வொரு படம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில்தான் துவங்கப்பட்டுவெளியாகி இருக்கிறது. அந்த வரிசையில் கடைசியாக வெளியான படையப்பா மாபெரும் வெற்றியைப் பெற்றது.அந்தப் படத்திற்குப் பின் ரஜினி அமைதியாக இருந்து வந்தார்.
இடையில் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டார். கர்நாடகத்தை பூர்வீகமாக கொண்ட ரஜினி காந்த் இதனால்அப்செட் ஆனார். தனது அடுத்த படத்தைத் துவக்க தயாராக இருந்த நிலையில் ராஜ்குமார் கடத்தப்பட்டதால் அந்தஎண்ணத்தைக் கைவிட்டார்.
ராஜ்குமார் விடுதலையானவுடன் அவரது அடுத்த படம் துவங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படிஎதுவும் நடக்கவில்லை. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தல் வந்தது. அந்த சமயத்திலும் சூப்பர்ஸ்டார் அமைதிகாத்தார். வாக்களித்ததோடு நின்று கொண்டார். திமுக, த.மா.க. யாருக்கும் ஆதரவளிக்கவில்லை. அதிமுகவைஎதிர்க்கவும் இல்லை.
தேர்தல் முடிவுக்குப் பின் ரஜினி நடிக்கும் அடுத்த படம் அவரது கடைசிப் படமாக இருக்கும் என்ற பேச்சுஎழுந்தது. அவரது அடுத்த படத்தை ஷங்கர், விக்ரமன், ராம்கோபால் வர்மா ஆகியோரில் ஒருவர் இயக்கலாம்என்று கூறப்பட்டது. ஆனால், அதுவும் நடக்கவில்லை.
இப்போது ஒரு வழியாக தனது அடுத்த படத்தை ரஜினி முடிவு செய்து விட்டதாகத் தெரிகிறது. இந்தப் படத்தைஅவரது ஆஸ்தான இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கவுள்ளார். படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை.பூஜை தினத்தன்று அது அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.
ரஜினிக்கு ராசியான ஏ.வி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோவிலில் 24ம் தேதி படப்பிடிப்பு துவங்கும்என்று தெரிகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் அல்லது தேவா ஆகியோரில் ஒருவர் இசையமைக்கலாம் என்று தெரிகிறது.இளையராஜாவின் பெயரும் அடிபடுகிறது.
படத்தில் சூடான அரசியல் காட்சிகளும், ரஜினியின் சமீபகால அஸ்திரமான காமடியும் ஓங்கியிருக்கும் என்றுகூறுகிறார்கள். இந்தப் படத்தில் தனது அரசியல் பிரவேசம், தற்போதைய அரசியல் நடப்புகள் குறித்து ரஜினிகூறவிருப்பதாக சொல்கிறார்கள்.
கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போட்ட மக்களை அது தவறு என்ற ரீதியில் ரஜினி சுட்டிக்காட்டவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











