»   »  கட்சி தொடங்க கோரி ரஜினிரசிகர்கள் போராட்டம்

கட்சி தொடங்க கோரி ரஜினிரசிகர்கள் போராட்டம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி தனது தலைமையில் புதிய இயக்கம் (அரசியல் கட்சி) தொடங்க கோரி அவரதுரசிகர்கள் திடீர் உண்ணாவிரதம் இருந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

தலைவா, நீங்கள் சிவாஜி படப்பிடிப்பில் பரபரப்பாக இருக்கும் இந்த நேரத்தில்உங்களை சிரமப்படுத்துவதற்கு மன்னிக்கவும்.

எங்களின் உணர்ச்சிகளை இப்போது வெளிப்படுத்தவில்லை என்றால் வேறுசந்தர்ப்பம் இல்லாமலேயே போய்விடும்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் பல்வேறு விமர்சனங்களுக்கு ஆளாகின்றோம்.இனியும் விலகிச் சென்றால் நம் சக்தி புரியாமல் போய்விடும். நாளைய வரலாறு நமதுதோல்வியையே கூறும். இதை விட வேதனை உங்கள் ரசிகனுக்கு இருக்கவேமுடியாது.

உங்களிடம் கேட்பது நமக்கென தனி அமைப்பு உங்கள் தலைமையின் கீழ் அமையவேண்டும். எங்களுக்கு நிலையான முகவரி வேண்டும்.

புதிய இயக்கத்தை தொடங்கி அதற்கு நீங்கள் தலைமை தாங்க வேண்டும்.

வலிமை இருந்தும் எளிமையாய் வாழும் தலைவனை திறமையுடன் வழி நடத்திச்செல்லும் தலைமை ஏற்க வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

1995க்கு பின் நிறுத்தி வைக்கப்பட்ட அகில இந்திய பதிவு எண் மீண்டும் வழங்கப்படவேண்டும். இந்த உண்ணாவிரத் போராட்டத்திற்கு தீர்வு கிடைக்காவிட்டால்காலவரையற்ற உண்ணாவிரத்தை சென்னையில் தொடங்குவோம் என அதில்கூறியுள்ளனர்.

விஜய்காந்த் ரசிகர்கள் எல்லாம் மடமடவென தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள்,ஒன்றிய செயலாளர்கள் ஆகிவிட்டு வெள்யை வேட்டி, வெள்ளை சட்டை, வெள்ளைசெருப்பு போட்டுக் கொண்டு டாடா சுமோக்களில் கும்பிடு போட்டபடி சுற்றிவருகின்றனர். உள்ளாட்சித் தேர்தலிலும் ஆயிரக்கணக்கான பதவிகளுக்குபோட்டியிடவுள்ளனர்.

ஆனால், அவர்களை விட ரொம்ப காலத்துக்கு முந்தியே அரசியல் கனவோடு ரஜினிமன்றங்களில் கால் வைத்த ரஜினி ரசிகர்கள் எந்தப் பக்கம் போவது என்று தெரியாமல்தடுமாறி வருகின்றனர்.

தனது படங்களில் அரசியல் வசனங்களை பேசிப் பேசி ரசிகர்களை உசுப்பேற்றிய ரஜினி 3 தேர்தல்களில் வாய்ஸ்கொடுத்து கிடைத்த தோல்விக்குப் பின் சைலண்ட் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil