»   »  சகதியில் புரண்ட ரஜினி!

சகதியில் புரண்ட ரஜினி!

Subscribe to Oneindia Tamil

சிவாஜி படத்துக்காக சகதியில் ரஜினி உருண்டு புரண்டு நடித்த காட்சி டெல்லியில் படமானது.

ஷங்கருக்கும், சகதிக்கும் ரொம்பவும் ராசி போல. முதல்வன் படத்தில் அர்ஜூனை, அம்மணக் கட்டையாகசகதியில்முக்கி எடுத்து சண்டை போட வைத்தார்.

அந்நியனிலும் சாக்கடை நிறைந்த பேக்ஸ்ட்ரீட் ஒன்றில் வில்லன்களை புரட்டி எடுத்தார் விக்ரம்.

இபபோது சிவாஜியில், சூப்பர் ஸ்டாரையே சகதியில் புரட்டி எடுத்துள்ளார் ஷங்கர்.

டெல்லியில் நடந்த படப்பிடிப்பில் ரஜினி, மணிவண்ணன், வடிவுக்கரசி, விவேக், ஸ்ரேயா சம்பந்தமான காட்சிகள்படமாக்கப்பட்டன.

வெளிநாட்டில் பல கோடி ரூபாய் பணம் சம்பாதித்த ரஜினி, சென்னையிலுள்ள தன் வீட்டுக்கு வருவது போன்றஒரு காட்சியும் படமானது. இதற்காக டெல்லி அருகே பிரமாண்டமான பங்களா ஒன்றைச் தேர்வு செய்து அங்குபடப்பிடிப்பு நடத்தப்பட்டது.

அடுத்து ரஜினியை போலீஸ் அதிகாரி சண்முகராஜன் கைது செய்து அழைத்துச் செல்லும் காட்சியும் படமானது.அதை தொடர்ந்து, சிறுவர்களுடன் ரஜினி சந்தோஷமாக அரட்டை அடித்த காட்சியை ஷங்கர் படமாக்கினார்.

இதைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட சகதியில் ரஜினி உருண்டுபுரண்டு நடித்தார். சகதியில் புரண்டு, உருண்டதால் ரஜினிக்கு ஜுரம் வந்து விட்டதாம்.

ஒரு நாள் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு மற்ற காட்சிகளில் நடித்தாராம்.

டெல்லியில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை திரும்பிய சிவாஜி படக் குழுவினர். தற்போது பின்னிமில்லில் மிகப் பெரிய மார்க்கெட் அரங்கு அமைத்து அதில் சூட்டிங்கை நடத்தி வருகின்றனர்.

இங்கு ஒரு பாடல் காட்சியில் ரஜினியும் ஸ்ரோயாவும் நடித்தனர். லாரன்ஸ் நடனப் பயிற்சி அளித்தார். கேவி.ஆனந்த் காட்சிகளை சுட்டார்.

முன்னதாக மார்க்கெட் ஒனிறில் வில்லன்களுடன் ரஜினி மோதுவது போன்ற காட்சியையும் ஷங்கர்படமாககியுள்ளார். அந்தப் படப்பிடிப்பின்போது தான் ரஜினிக்கு சுளுக்கிக்கொண்டது.

சூப்பர் ஸ்டாராச்சே, எல்லாத்தையும் தாங்கித் தானே ஆக வேண்டும்...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil