ஹீரோ .. ஹீரோ ..

By Staff

சுமார் 3 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு "பாபா" என்ற புதிய படத்தைத் தயாரித்து நடிக்க இருப்பதாகரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

3 ஆண்டுகளுக்கு முன் ரஜினி நடித்த "படையப்பா"வுக்குப் பிறகு ரஜினி எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவர்தொடர்ந்து படத்தில் நடிப்பாரா அல்லது அரசியலுக்கு வருவாரா என்று தமிழகம் முழுவதும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

ரஜினியின் ரசிகர்களும் மிகவும் நொந்து போயிருந்தனர். "தலைவர்" படம் வெளிவராத தீபாவளியும் ஒருதீபாவளியா என்று கூறி தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைகளைக் கடந்த 3 ஆண்டுகளாக அவருடையரசிகர்கள் கொண்டாடாமல் இருந்து வந்தனர்.

ரஜினி நடிக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று ஒரு தரப்பினரும் கூறிவந்தனர். சமீபத்தில் "துக்ளக்" ஆசிரியர் சோவும் அவர் அரசியலுக்கு வந்து 3வது அணிக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

எதற்குமே பதில் அளிக்காத ரஜினி, திடீரென்று நேற்று (ஞாயிற்றுக்கிழமை, பிப்.17, 2002) தனது புதிய படத்தின்அறிவிப்பை வெளியிட்டார். இது குறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

"லோட்டஸ் இன்டர்நேஷனல்" என்ற பேனரில் ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் நானே எழுதி, தயாரித்து,நடிக்க முடிவு செய்துள்ளேன். படத்தின் பெயர் "பாபா".

சுரேஷ் கிருஷ்ணா "பாபா"வை இயக்கவுள்ளார். வி.ஏ.துரை நிர்வாகத் தயாரிப்பாளராக இருப்பார். விரைவில்இப்படத்தை துவக்க இருக்கிறோம்.

இப்படத்தின் மூலம் வரும் லாபத்தின் பெரும் பகுதியை ராகவேந்திரா கல்வி அறக்கட்டளைக்கு அளிக்க முடிவுசெய்துள்ளேன் என்று அந்த அறிக்கையில் ரஜினி கூறியுள்ளார்.

"பாபா" படத்திற்கான கதாநாயகி மற்றும் இசை அமைப்பாளர் குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஆனால்இந்தியில் "பிசி"யாக உள்ள ஐஸ்வர்யா ராயைக் கதாநாயகியாகவும், ஏ.ஆர். ரகுமானை இசை அமைப்பாளராகவும்ஒப்பந்தம் செய்வதற்காக இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா மும்பைக்கு விரைந்துள்ளார்.

ரஜினிகாந்த்துடன் நடிப்பதற்குத் தயாராக உள்ளேன் என்று ஏற்கனவே ஒரு பேட்டியில் ஐஸ்வர்யா ராய்கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் உற்சாகம்:

இதற்கிடையே ரஜினியின் புதுப்பட அறிவிப்பைக் கேள்விப்பட்டு உற்சாகமடைந்த ரசிகர்கள் நேற்று இரவேசென்னையின் பல்வேறு பகுதிகளிலும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X