மீண்டும் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் ரஜினி: அப்போ அரசியல் தலைவா?
சென்னை: ரஜினியின் அடுத்த படத்தை கே.எஸ். ரவிக்குமார் இயக்கப் போவதாக கூறப்படுகிறது.
காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் தனது 165வது படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்.

இந்நிலையில் ரஜினியின் 166வது படம் குறித்த பேச்சு கிளம்பியுள்ளது. கார்த்திக் சுப்புராஜை அடுத்து கே. எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
ரவிக்குமார் அண்மையில் ரஜினியை சந்தித்து கதை சொல்ல அது அவருக்கு பிடித்துவிட்டதாம். புதுப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக ரஜினி ரவிக்குமார் இயக்கத்தில் முத்து, படையப்பா, லிங்கா ஆகிய படங்களில் நடித்துள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்திலும் ரஜினி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானால் அரசியல் பிரவேசம் எப்பொழுது தலைவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











