கௌபாய் கெட் அப்பில் ரஜினி: சோனாக்ஷியுடன் டூயட்
லிங்கா படத்தில் ரஜினிகாந்த் கௌபாய் கெட் அப்பில் சோனாக்ஷி சின்கா உடன் டூயட் நடனம் ஆடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரட்டை வேடத்தில் ரஜினி நடிக்கும் இப்படத்தில் சோனாக்ஷி சின்ஹா , அனுஷ்கா ஜோடி சேர்ந்துள்ளனர்.
லிங்கா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். எப்போதும் ரஜினி படம் என்றால் மற்ற படங்களை விட விரைவில் பாடல்களைக் கொடுத்து விடும் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு மட்டும் சற்று நேரம் அதிகம் எடுத்துக் கொண்டு பாடல்களைக் கொடுத்துள்ளார்.படத்தின் அனைத்து காட்சிகளும் ஓரளவு முடிந்த வேளையில் தற்போது பாடல் காட்சிகள் படமாக்கப் பட உள்ளன.

யூத் ரஜினி
'லிங்கா' படத்தில் இரண்டு கதாபாத்திரங்களிலும் யூத்தாகவே தோன்றுகிறாராம் ரஜினி. எனவே சோனாக்ஷி மற்றும் அனுஷ்காவுடனான காதல் காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்குமாம்.

ஹைதராபாத்தில் சூட்டிங்
படத்தில் சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டமும், நிகழ்காலமும் வருகிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம் சம்பந்தமான காட்சிகளை ஹைதராபாத்தில் எடுத்தனர். கடந்த 8ஆம் தேதியோடு ஹைதராபாத் ஷெட்யூல் நிறைவு பெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.

பாடல் காட்சிகள்
இந்த ஷெட்யூலில் டாக்கி போர்ஷனுடன் பாடல் காட்சி ஒன்றையும் எடுக்கின்றனர். ரவிக்குமார் எதிர்பார்த்ததைவிட அற்புதமான பாடல் டியூனை தந்துள்ளாராம் ரஹ்மான். அந்த உற்சாகத்தில் சென்னை ஷெட்யூல்லில் பாடல் காட்சியை படமாக்குவது என்று முடிவு செய்துள்ளனர்.

நான்கு கெட்அப்பில்
இந்தப் பாடலில் நான்கு கெட்டப்களில் தோன்றும் ரஜினி ஒரு கெட்டப்பாக கௌபாய் வேடத்தில் சோனாக்ஷி சின்ஹாவுடன் டூயட் ஆடுகிறாம்.


Click it and Unblock the Notifications











