இன்று சென்னை ரசிகர்களின் பிரமாண்ட விழா... வருகிறார் ரஜினி?

By Shankar

முதல் முறையாக தனது ரசிகர்கள் நடத்தும் பிறந்த நாள் விழாவில் பங்கேற்கப் போகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி.

இன்று மாலை சென்னையில் சரத்குமார் தலைமையில், ராதாரவி உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்கள் பங்கேற்கும் இந்த விழாவில் திடீர் வருகை தந்து ரசிகர்களை ஆனந்த வெள்ளத்தில் ஆழ்த்தப் போகிறார் ரஜினி என மன்ற நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர்.

முதல் முறை...

முதல் முறை...

ரசிகர்கள் இன்று நேற்றல்ல... 30 ஆண்டுகளுக்கும் மேலாக ரஜினியின் பிறந்த நாளை வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர். ஆனால் ஒருமுறை கூட அந்த விழாக்களில் பங்கேற்றதில்லை ரஜினி. அனுமதியும் பாதுகாப்பாக இருக்கும்படி அட்வைஸும் அளிப்பதோடு சரி.

ஆர்எம் வீரப்பனுக்காக...

ஆர்எம் வீரப்பனுக்காக...

1995-ம் ஆண்டு மட்டும் ஒரே ஒரு முறை பனகல் பார்க்கில் நடத்த ஒரு ரசிகர் மன்ற விழாவில் பங்கேற்றார் சூப்பர் ஸ்டார். அது கூட ஆர்எம் வீரப்பனுக்காக. அதன் பிறகு பொதுவெளியில் ரசிகர்கள் போட்ட மேடையில் அவர் ஏறியதில்லை.

மாநாடு ரேஞ்சுக்கு...

மாநாடு ரேஞ்சுக்கு...

இன்று நடக்கும் ரசிகர் மன்றக் கூட்டம் வள்ளுவர் கோட்டத்தில் மூவாயிரம் ரசிகர்களை மட்டும் அழைத்து நடத்துவதாகத்தான் இருந்தது. ஆனால் தமிழக அரசு வள்ளுவர் கோட்டத்தில் நடத்த அனுமதி மறுத்தது.

விளைவு.. ஒரு பெரிய மாநாடு ரேஞ்சுக்கு விழா மாறிவிட்டது. ஒய்எம்சிஏ மைதான திறந்த வெளியில் பல ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் விழா நடக்கவிருக்கிறது.

வெளி மாவட்டங்களிலிருந்து...

வெளி மாவட்டங்களிலிருந்து...

அதுமட்டுமல்ல, முதல் முறையாக வெளிமாவட்ட ரசிகர்களுக்கும் இந்த மாநாட்டுக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. நேற்றுமுதலே பல ஊர்களிலிருந்தும் ரசிகர்கள் திரள ஆரம்பித்துள்ளனர்.

அரசியல் பேச்சு இல்லாமலா...

அரசியல் பேச்சு இல்லாமலா...

இந்த நிகழ்ச்சி நடப்பதே, ரஜினியின் ரசிகன் என்று தன்னை அடிக்கடி சொல்லிக் கொள்ளும் சரத்குமார் தலைமையில்தான். மற்றொரு சிறப்பு அழைப்பாளரான ராதாரவி பற்றி சொல்லவே வேண்டாம். இவர்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம், ரஜினியை அரசியலுக்கு அழைக்கத் தவறியதே இல்லை. எனவே இன்றும் அரசியல் பேச்சு நிச்சயம் இருக்கும்.

வாக்களித்த ரஜினி...

வாக்களித்த ரஜினி...

இந்த விழாவுக்கு வரவேண்டும் என கடந்த ஒரு மாதமாக ரஜினியை வற்புறுத்தி வருகின்றனர் சென்னை மாவட்ட நிர்வாகிகள். அவர் 'பார்க்கலாம்பா...' என்று மட்டும் சொல்லி வந்தாராம். நேற்று விழாவுக்கு வருகிறேன். ஆனால் 10 நிமிடம்தான் இருப்பேன் என்று வாக்களித்துள்ளாராம்.

இது போதாதா... தலைவா... என உற்சாகக் குரல் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது திரும்பிய பக்கமெல்லாம்!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X