காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ரஜினிக்கு சிறப்புப் பூஜை!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'ரானா' சினிமாப்பட தொடக்க விழா கடந்த ஏப்ரல் மாத இறுதியில் நடைபெற்றது. இதில் பங்கேற்று விட்டு திரும்பிய சிறிது நேரத்தில் ரஜினிகாந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் பின்னர் சிங்கப்பூர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
சமீபத்தில் பூரண நலமடைந்து சிங்கப்பூரிலிருந்து சென்னைக்கு திரும்பினார்.
தற்போது அவர் பண்ணை வீடு, போயஸ் கார்டன் இல்லம் மற்றும் தனது மூத்த மகள் ஐஸ்வர்யா வீடு என விருப்பப்படி ஓய்வு பெற்று வருகிறார். அவர் பூரண உடல்நலம் பெற்று திரும்பியதை அடுத்து ரசிகர்கள் கோவில்களில் மொட்டை அடித்தும் பல்வேறு வகையில் நேர்த்திக் கடன்களை செலுத்தியும் சிறப்பு பூஜைகள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இம்மாத (ஆடி மாதம்) இறுதிக்குள் பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்ய இருக்கிறார்.
கால பைரவருக்கு சிறப்பு பூஜை
அங்கு அம்பாளுக்கு பட்டுப்புடவை சாற்றி, அம்பாள் சன்னிதானத்தில் சுவாமியை தரிசனம் செய்ய வருவதாக தகவல் அனுப்பியுள்ளார்.
கோவில் வளாகத்தில் உள்ள கால பைரவருக்கு நடைபெறும் விசேஷ பூஜையிலும் கலந்து கொள்கிறார். அங்கு அவர் 108 வடமாலை, சம்பா சாதம் (மிளகு சாதம்) ஆகியவற்றை கால பைரவருக்கு நெய்வேதியம் செய்து சுவாமியை தரிசனம் செய்கிறார்.
இந்த தகவலை காமாட்சியம்மன் கோவில் அர்ச்சகர் ஒருவர் தெரிவித்தார்.
ஏற்கெனவே நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்தியநாராயணன் மூலமாக காமாட்சி அம்மன் கோவிலில் 2 நாட்கள் சண்டி ஹோமம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











