ஹீரோ .. ஹீரோ ..

By Staff

நடிகர் ரஜினிகாந்த்திற்கு இன்று 54-வது பிறந்தநாள். இதையொட்டி வழக்கம் போல சென்னையில் இல்லாமல்,பெங்களூர் சென்று விட்ட ரஜினிகாந்த் அங்குள்ளஆசிரமம் ஒன்றில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டார். பின்னர்தனது பண்ணை வீட்டில் பிறந்த நாளை எளிய முறையில் கொண்டாடினார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் தனது பிறந்தநாளை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடுவதில்லை. க்ன்னைக்காண சென்னைக்கு வரும் ரசிகர்களையும் அவர் சந்திப்பதை தவிர்த்து வருகிறார். பொதுவாக அவர் பிறந்தநாளின்போது பெங்களூர் சென்று விடுவார்.

இந்த முறையும் ரஜினி வழக்கம் போல பெங்களூர் சென்று விட்டார். 5ம் தேதியே பெங்களூர் சென்று விட்டரஜினிகாந்த், அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கினார். அனுமந்த் நகரில் உள்ள தனது அண்ணன் வீடு,அக்காள் வீடு ஆகியவற்றிற்கு இன்னும் அவர் செல்லவில்லை. ஹோட்டலில் இருந்தபடியே அவர்களை சந்தித்தார்.

ஆஸ்திரேலியாவில் படித்து வரும் ரஜினியின் மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா ஆகிய இருவரும் தந்தையின்பிறந்த நாளைக் கொண்டாடவதற்காக பெங்களூர் வந்துள்ளனர். தனது மனைவி மற்றும் மகள்களுடன் இன்றுபெங்களூர் கங்காதபுரம் அருகே உள்ள சேஷாயி மடம் என்ற ஆசிரமத்திற்கு ரஜினி சென்றார். அங்கு சிறப்புபிரார்த்தனையில் அவர் ஈடுபட்டார். விரதமும் இருந்தார்.

பின்னர் ரஜினி தனது பெங்களூர் பண்ணை வீட்டில் பிறந்த நாளைக் கொண்டாடினர்.

தொடர்ந்து அங்கேயே தங்கும் ரஜினி 15ம் தேதி சென்னை திரும்புகிறார் என்று தெரிகிறது.

பிறந்த நாளை ரசிகர்களுடன் கொண்டாடமல் ரஜினி பெங்களூர் சென்று விட்டாலும் கூட தங்களது தலைவரின்பிறந்த நாளையொட்டி வழக்கம் போல சிறப்பு ஏற்பாடுகளுடன் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.


பெங்களூரில் ஒட்டப்பட்டுள்ள ரஜினியின் பிறந்த நாள் வாழ்த்துப் போஸ்டர்

சென்னை முதல் குமரி வரை அத்தனை பகுதிகளிலும் ரஜினியை வாழ்த்தி ரசிகர்கள் பல வகையான, மிகவித்தியாசமான சுவரொட்டிகளை ஒட்டியும், ஒலி பெருக்கிகளில் ரஜினி பாடல்களை முழங்கியும் கொண்டாடிவருகிறார்கள். பல இடங்களில அன்னதானம் உள்ளிட்ட பல தர்ம காரியங்களையும் ரசிகர்கள் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X