நியூயார்க்கில் கிறிஸ்துமஸ் கொண்டாடும் ரஜினிகாந்த்... வைரலாகும் புகைப்படம்!
சென்னை : அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அங்கு கிறிஸ்துமஸ் கொண்டாடி வருகிறார்.
பேட்ட பட வேலைகளை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், 20 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருக்கும் நாட்களில் ஓய்வெடுப்பது மட்டுமே முழுநேர வேலையாக அவர் செய்து வருகிறார்.

இந்நிலையில் நியூயார்க் நகரில் கொடும் பனியில், குல்லா, ஸ்வெட்டர் அணிந்து சிலருடன் நின்று போட்டோவுக்கு போஸ் கொடுத்திருக்கிறார் அவர். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக தான் ரஜினி அமெரிக்கா சென்றுள்ளதாகக் கூறுப்படுகிறது. சென்னையில் இருந்து அவர் தனியாக கிளம்பினாலும், இரண்டொரு நாட்களில் குடும்பத்தினரும் அவருடன் இணைந்து கொள்வர் என தெரிகிறது.
Comments


Click it and Unblock the Notifications