ரஜினி ரசிகர் திருமணம்.... இரண்டாவது முறை வந்து வாழ்த்திய சூர்யா!

By Shankar

 Surya
சென்னை: தன்னை மதித்து திருமணத்துக்கு அழைத்த ரசிகருக்காக மாலையில் வந்த சூர்யா, கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டார். மணமக்களுக்கு வாழ்த்த முடியாமல் போனது.

இதனால் மறுநாள் காலை மீண்டும் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டுப் போயிருக்கிறார் சூர்யா.

ரஜினி ரசிகர் மன்றத்தின் வேலூர் மாவட்ட பொருளாளர் சோளிங்கர் ரவியின் தம்பி முருகனுக்கும் ராஜலட்சுமிக்கும் நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் திருமணம் நடந்தது.

ரஜினி ரசிகர் என்றாலும் நடிகர் சிவகுமார் குடும்பத்துடன் நல்ல பழக்கம் உள்ளவர் சோளிங்கர் ரவி. எனவே திருமணத்துக்கு வந்து வாழ்த்துமாறு சிவகுமார், சூர்யா மற்றும் கார்த்திக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

திருமணத்துக்கு ரஜினி வருவார் என்பதால் ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

புதன்கிழமை மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கு சிவகுமார் குடும்பத்துடன் வந்தார். சூர்யா தன் மனைவி ஜோதிகாவை அழைத்து வந்தார்.

ஆனால் கூட்ட நெரிசல் காரணமாக அவரால் திருமண மேடையை நெருங்கக் கூட முடியவில்லை. ரசிகர்கள் ஆர்வத்துடன் சூர்யாவையும் ஜோதிகாவையும் சுற்றி வளைத்துக் கொண்டதால், ஒரு அடிகூட அவர்களால் நெருங்க முடியவில்லை. மணமேடைக்குப் போகவே முடியாததால் கோபமடைந்த சூர்யா, மனைவியை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிவிட்டார்.

ஆனால் மறுநாள் காலையிலேயே தன் தந்தை சிவகுமாருடன் வந்தார் சூர்யா. கூட்டமிருந்தாலும், இந்த முறை போலீஸ் பாதுகாப்புடன் வேகமாக மேடைக்குப் போய் மணமக்களை வாழ்த்தினாராம்.

கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இருமுறை வந்த சூர்யாவுக்கு கண்ணீருடன் நன்றி சொன்னதோடு, முதல்நாள் ரசிகர்கள் செய்த கலாட்டாவுக்கு வருத்தம் தெரிவித்தார்களாம் சோளிங்கர் ரவி குடும்பத்தினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X