அட கடவுளே.. அநியாயமா ஒரு ஆட்ட கொன்னுட்டீங்களே.. அதிர வைக்கும் அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் கொண்டாட்டம்!

சென்னை: அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கொண்டாட்டத்தில் ஆட்டு கிடா ஒன்றை ரசிகர்கள் பலி கொடுத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் அண்ணாத்த. இந்த படம் நடிகர் ரஜினிகாந்தின் 168வது படம் ஆகும்.

இந்தப் படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ், ஜாக்கி ஷெராஃப், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

லாக்டவுனால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு

லாக்டவுனால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கியது. ஆனால் 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பின்னர் அறிவிக்கப்பட்ட தளர்வுகளை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினி

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரஜினி

அப்போது படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்துக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு கடந்த மார்ச் முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஹைத்ராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்ற படப்பிடிப்பில் சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். 30 நாட்களுக்கு மேலாக பங்கேற்று தனது காட்சிகளை நடித்து கொடுத்தார் ரஜினிகாந்த்.

படக்குழுவினரிடம் உருக்கமாக பேசிய ரஜினி

படக்குழுவினரிடம் உருக்கமாக பேசிய ரஜினி

கடந்த மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இறுதிநாள் படப்பிடிப்பின் போது ரஜினிகாந்த் படக் குழுவினரிடம் அண்ணாத்த என்னுடைய கடைசி படமாக இருக்கக்கூடாது என உருக்கமாக பேசினார். இதனை தொடர்ந்து மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் ரஜினிகாந்த். அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளினிக்கில் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யாவுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த போட்டோக்கள் வெளியாகி ட்ரென்ட்டானது.

அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள்

அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகள்

பின்னர் அமெரிக்காவில் உள்ள தனது ரசிகர்களையும் சந்தித்தார் ரஜினிகாந்த். அந்த போட்டோக்களும் சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. மருத்துவ பரிசோதனைக்கு பிறகு சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த், அண்ணாத்த படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டார். அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்த்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததாக தகவல் வெளியானது.

போஸ்ட் புரடெக்ஷன் தீவிரம்

போஸ்ட் புரடெக்ஷன் தீவிரம்

இதனை தொடர்ந்து அண்ணாத்த படத்தின் படக்குழு ஃபிளாஷ்பேக் காட்சிகளை படமாக்க லக்னோ சென்றனர். ஆனால் அங்கு படப்பிடிப்பை நடத்த முடியாததால் படக்குழு கொல்கத்தாவில் எஞ்சிய காட்சிகளை படமாக்கியது. கடந்த வாரம் படக்குழு சென்னை திரும்பியதாக கூறப்பட்டது. வரும் தீபாவளிக்கு அண்ணாத்த படம் ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் விநாயகர் சதுர்த்தியான நேற்று வெளியானது. இதனை ரசிகர்கள் கன்னாபின்னாவென கொண்டாடி வருகின்றனர். நேற்று முதல் #Annaththe என்ற ஹேஷ்டேக்கும் இணையத்தில் ட்ரெண்ட்டாகி தெறிக்கவிட்டு வருகிறது.

ஆட்டை பலி கொடுத்து கொண்டாட்டம்

ஆட்டை பலி கொடுத்து கொண்டாட்டம்

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ரசிகர்கள் காட்டுமிராண்டித்தனமாக கொண்டாடும் வீடியோ ஒன்று வெளியாகி பகீர் கிளப்பியுள்ளது. அதாவது அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பேனருக்கு முன்பு தாரை தப்பட்டையுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் ஒரு ஆட்டு கிடாவை துடிதுடிக்க வெட்டி பலி கொடுத்துள்ளனர்.

ரஜினி பேனருக்கு ரத்த அபிஷேகம்

ரஜினி பேனருக்கு ரத்த அபிஷேகம்

பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட அந்த ஆட்டை பேனரின் மீது தூக்கி காட்டி ஆட்டு ரத்தத்தில் அபிஷேகம் செய்துள்ளனர். சுற்றிலும் சிறுவர்களும் குழந்தைகளும் நிற்க இப்படி ஒரு கொலை வெறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் ரஜினியின் வெறித்தனமான ரசிகர்கள். இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

எருமை மாடு பலி கொடுத்த ரசிகர்கள்

எருமை மாடு பலி கொடுத்த ரசிகர்கள்

பிரபல கன்னட நடிகரான கிச்சா சுதீப்பின் பிறந்த நாளின் போது கர்நாடகாவில் அவரது ரசிகர்கள் எருமை மாடு ஒன்றை இப்படி தான் பலி கொடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் தற்போது அண்ணாத்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் ஆட்டை பலி கொடுத்திருப்பது சமூக வலைதளத்தில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது.

முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்

முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்

நடிகர்களுக்காக ஆடு பலி கொடுப்பது மாடு பலி கொடுப்பது போன்ற கொடூர்மான செயல்கள் ஆதரிக்கப்பட்டால் ஒவ்வொரு படம் வெளியாகும் போதும் சினிமா தியேட்டர் வாசல்கள் விலங்குகள் பலியிடுதலால் ரத்தகளறியாகும். இதுபோன்ற ஈவு இரக்கமற்ற செயல்கள் மூலம் ரசிகர்கள் உச்ச நடிகருக்கு மரியாதை செலுத்துவதைப் பார்க்கும் மற்ற நடிகர்களின் ரசிகர்களும் இது போன்ற செயல்களை தொடர்வார்கள். ஆகையால் இதுபோன்ற காட்டுமிராண்டித்தன செயல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X