இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரஜினியின் பேச்சை கேட்காத ரசிகர்கள்

By Siva

Recommended Video

நாளை ரஜினியின் 68-வது பிறந்தநாள்- வீடியோ

சென்னை: ரஜினி எத்தனை முறை கூறினாலும் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ரசிகர்கள் அவரின் பேச்சை கேட்பது இல்லை.

ரஜினிகாந்த் தனது 68வது பிறந்தநாளை நாளை கொண்டாடுகிறார். இந்த பிறந்தநாளிலாவது அரசியல் வருகை குறித்து அவர் தெளிவாக ஏதாவது கூறுவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பது நாளை தெரிய வரும்.

பிறந்தநாள்

பிறந்தநாள்

நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று ரஜினிகாந்த் அறிவித்த பிறகு வரும் முதல் பிறந்தநாள். அதனால் ரஜினி அரசியல் பற்றி பேசியே ஆக வேண்டும். அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த ஓராண்டில் அவர் ஒரு உறுதியான முடிவை எடுத்து அதிரடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

ரசிகர்கள்

ரசிகர்கள்

என் பிறந்தநாள் அன்று நான் வீட்டில் இருப்பது இல்லை என்று பேட்ட இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்தார் ரஜினி. அவர் வீட்டில் இருக்க மாட்டார் என்று தெரிந்தும் அவரை பார்க்கும் ஆசையில் பிறந்தநாள் அன்று அவர் வீட்டிற்கு முன்பு ரசிகர்கள் குவிவது வழக்கமாகிவிட்டது. நாளையும் போயஸ் கார்டன் வீட்டிற்கு முன்பு ரசிகர்கள் திரள்வார்கள். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவர்கள் ரஜினியின் பேச்சை கேட்பது இல்லை.

தேர்தல்

தேர்தல்

இந்த தேதியில் கட்சி துவங்குகிறோம், தேர்தலில் போட்டியிடுகிறோம், ஆட்சியை பிடிக்கிறோம் என்று ரஜினி பேசுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. பேட்ட இசை வெளியீட்டு விழாவில் கலாநிதிமாறனுக்காக அரசியல் பேசுவதை தவிர்த்த ரஜினி நாளை தாராளமாக பேசலாம். பேசுவாரா இல்லையா என்பது நாளை தெரியும்.

டபுள் கொண்டாட்டம்

டபுள் கொண்டாட்டம்

எதிர்பார்ப்புகள் எல்லாம் ஒரு புறம் இருக்க ரஜினியின் பிறந்தநாளை அமோகமாக கொண்டாட அவரின் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளார்கள். அதுவும் 2.0 படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளதால் டபுள் கொண்டாட்டம் தான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X