தமன்னா மாதிரியே மஞ்சு வாரியரையும் ஆக்கிட்டாங்க.. அவரோடும் ஆட முடியல.. ஃபீல் செய்யும் ரஜினிகாந்த்

சென்னை: ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. ஞானவேல் இயக்கியிருக்கும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சுவாரியர், துஷாரா, ரித்திகா சிங், அபிராமி, ரோஹிணி என பலர் நடித்திருக்கிறார்கள். கண்டிப்பாக இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ப்ரீ புக்கிங்கிலும் நல்ல ரெஸ்பான்ஸ் படத்துக்கு இருக்கிறது.

ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்து கடைசியாக ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த அந்தப் படத்தை ரஜினி ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தனர். ஏனெனில் ஜெயிலருக்கு முன்னதாக ரஜினி நடித்த அண்ணாத்த, தர்பார் ஆகிய இரண்டு படங்கள் சரியாக போகவில்லை. எனவே அவரை சிலர் விமர்சிக்க செய்தனர். அதன் காரணமாக ஜெயிலர் படத்தை மெகா ஹிட்டாக்கி தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்க ரஜினி காத்திருந்தார். அதன்படியே படமும் மெகா ஹிட்டானது.

vettaiyan rajini tamannaah

வேட்டையன்: ஜெயிலர் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடிக்க கமிட்டானார் ரஜினிகாந்த். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் பெரும் நட்சத்திர பட்டாளமே களமிறங்கியிருக்கிறது. அனிருத் இசையமைத்திருக்கிறார்.முதன்முறையாக ரஜினியுடன் ஞானவேல் இணைந்திருக்கிறார். கண்டிப்பாக அவர் இயக்கிய ஜெய் பீம் படம் எப்படி பெரும் ரெஸ்பான்ஸை பெற்றதோ அதேபோன்ற ஒரு ரெஸ்பான்ஸை வேட்டையன் பெற வேண்டும் என்ற ஆவல் ரசிகர்களிடம் இருக்கிறது.

ப்ரீ டிக்கெட் புக்கிங்: படத்துக்கு எக்கச்சக்க ஹைப் இருப்பதை வேட்டையன் ப்ரீ புக்கிங் உறுதி செய்திருக்கிறது. வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங்கில் படம் பல சாதனைகளை படைத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் விஜய்யின் முந்தைய படங்களின் ப்ரீ புக்கிங் ஹிஸ்ட்ரியை வேட்டையன் ஓரங்கட்டிவிட்டதாக ரஜினி ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும் ரஜினிகாந்த்துக்கு இப்போதும் மவுசு இருப்பதை இது உணர்த்துவதாகவும் அவர்கள் கூறிவருகிறார்கள்.

ரஜினி பேச்சு: இதற்கிடையே படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கடந்த மாதம் நடந்தது. அப்போது ரஜினிகாந்த் உச்சக்கட்ட உற்சாகத்தில் பேசினார். அனிருத் பற்றி அவர் அந்த விழாவில் பேசியபோது நடிகைகள் பற்றியும் பேசினார். அந்தப் பேச்சில் அவர், "அனிருத் ஒரு ஜோதிடக்காரர் மாதிரி. இந்தப் படம் ஓடுமா ஓடாதா என்பதை அவர் முன்கூட்டியே சொல்லிவிடுவார். ஷூட்டிங்கில்கூட படத்தை பற்றி அனி என்ன சொன்னார் என்றுதான் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

இதான் நிலைமை: ஜெயிலர் படத்தில்கூட ஹுக்கும் அப்படித்தான் உருவானது. எனக்கான ஷூட்டிங் முடிந்தது. டப்பிங் பேசிக்கொண்டிருந்தேன். அப்போது வந்த அனிருத் சார் நீங்கள் ஒரு ஹுக்கும் சொன்னால் அதை சேர்த்துவிடுவேன் என்று சொன்னார். நானும் பேசினேன். அதேபோல் அந்தப் படத்தின் ஒரு பாடலில், சார் நீங்கள் பாடல் ஃபுல்லாவே வருவீங்க என்று சொல்லி எப்படி தமன்னாவை முழுதாக ஆடவிட்டு என்னை ரெண்டு ஷாட்டில் காண்பித்தார்களோ; அதேபோல்தான் மனசிலாயோ பாடலும். அந்தப் பாடலில் எப்படி தமன்னாவோடு ஆட முடியவில்லையோ அதேபோல்தான் இந்த மனசிலாயோ பாடலிலும் மஞ்சு வாரியரைத்தான் ஆட விட்டிருக்கிறார்கள்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X