twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார்த்திக் சுப்புராஜ் படத்தில் 40 நாட்கள் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

    By Siva
    |

    Recommended Video

    40 நாட்கள் நடிக்க ரஜினிக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?- வீடியோ

    சென்னை: கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க ரஜினிக்கு அளிக்கப்படும் சம்பளம் பலரையும் வியக்க வைத்துள்ளது.

    காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ரஜினி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

    ரஜினி, விஜய் சேதுபதி கூட்டணியால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

    சம்பளம்

    சம்பளம்

    கார்த்திக் சுப்புராஜ் படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ. 65 கோடி சம்பளமாம். படப்பிடிப்பு இந்த ஆண்டு துவங்கி படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜ்

    கார்த்திக் சுப்புராஜுக்கு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினி. இந்த படத்தின் மூலம் முதன் முதலாக அனிருத் ரஜினியுடன் சேர்ந்து பணியாற்றுகிறார். தலைவர் படத்திற்கு இசையமைக்கும் மகிழ்ச்சியில் உள்ளார் அனிருத்.

    சென்னை

    சென்னை

    ரஜினி தற்போது அமெரிக்காவில் உள்ளார். அவர் இந்த வாரம் சென்னை திரும்புகிறார் என்று கூறப்படுகிறது. அவர் திரும்பி வந்ததும் காலா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வாராம்.

    ஜூன்

    ஜூன்

    கபாலி படத்தை அடுத்து பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள காலா படம் ஜூன் மாதம் 7ம் தேதி ரிலீஸாக உள்ளது. பா. ரஞ்சித் தான் பேச நினைக்கும் அரசியலை ரஜினியை வைத்து படம் மூலம் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    According to reports, Rajini is getting paid Rs. 65 crore for his upcoming movie with Karthik Subbaraj. The untitled movie is bankrolled by Sun pictures.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X