விக்ரமைப் போன்ற நடிகர்கள் இந்த உலகத்திலேயே இல்லை! - ரஜினி பாராட்டு

By Shankar

சென்னை: விக்ரமைப் போல கேரக்டருக்காக தன்னை வருத்திக் கொள்ளும் நடிகர்கள் உலகிலேயே இல்லை என்றார் ரஜினிகாந்த்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஐ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ் விழாவில் சிறப்பு விருந்தினராக ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஷ்வார்ஷநெக்கர் கலந்து கொண்டார். சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் ஆகியோரும் இவ்விழாவில் பங்கேற்றனர்.

(ஐ இசை வெளியீடு படங்கள்)

ரஜினி வெளியிட்டார்

ரஜினி வெளியிட்டார்

பாடல்களை வெளியிடும் நேரத்தில் விழாவிலிருந்து அர்னால்ட் வெளியேறிவிட, ரஜினியே பாடல்களை வெளியிட்டு வாழ்த்திப் பேசினார்.

எப்போ ரிலீஸ்?

எப்போ ரிலீஸ்?

விழாவில் ரஜினி பேசுகையில், "நிச்சயமாக இந்தவிழா ஒரு இசை வெளிட்டு விழாவைப் போல இல்லாமல், ஒரு வெள்ளிவிழா போல நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் டிரெய்லரைப் பார்க்கும் போது படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது.

உச்சகட்டம்

உச்சகட்டம்

ஷங்கர் சினிமாவில் 20 ஆண்டுகளாகப் பயணம் செய்கிறார். அவரின் முதல் படத்திலிருந்து அவர் இயக்கிய அடுத்தடுத்த படங்களில் மேலே மேலே தான் சென்றுகொண்டிருக்கிறார். இந்த ஐ படம், அவர் இதுவரை இயக்கிய படங்களில் உச்சகட்டமாக அமைந்திருக்கிறது. இதற்கு மேல் அடுத்த படியாக அவர் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை. இன்னும் அவரிடம் நிறைய இருக்கிறது. அவர் விரைவில் இந்தப் படத்தை வெளியிடக் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழில் இல்லாத திறமையா?

தமிழில் இல்லாத திறமையா?

ஹாலிவுட்டில் பல விஷயங்கள் செய்கிறார்கள், நம்மிடம் திறமைசாலிகள் இல்லையா? ஏன் நாம் தமிழ் சினிமாவில் அதை செய்யக்கூடாது என்று நினைத்து, பல முயற்சிகளைச் செய்கிறார். தமிழ் சினிமாவை, இந்திய சினிமாவை ஹாலிவுட் உயரத்திற்குக் கொண்டு சென்றுள்ளார் ஷங்கர். பணம், நேரம் இதை எல்லாம் பார்க்காமல் உழைக்கும் உண்மையான சினிமா இந்தியன் அவர்தான்.

அம்மாவிடம் அழுத ரஹ்மான்

அம்மாவிடம் அழுத ரஹ்மான்

அவருக்கு பக்கபலமாக நம் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கிறார். ரஹ்மான் அவர் தாயாரிடம் சென்று,‘எந்த ட்யூன் போட்டாலும் ஷங்கர் வேண்டாம் என்கிறார்' என்று சொல்லி அழுததாக நான் கேள்விப்பட்டேன். அந்த அளவுக்கு ஷங்கர் அவரிடம் வேலை வாங்குவார் என்று எனக்குத் தெரியும்.

உலக நடிகர் விக்ரம்

உலக நடிகர் விக்ரம்

இந்த படத்தின் நாயகன் சீயான் விக்ரம். ‘ஓ போடு' சீயான், இனி ‘ஐ' சீயான் என அழைக்கப்படுவார். தன் உடலை வருத்திக் கொள்ளும் ஒரு நடிகர் அவர். விக்ரமைப் போல கதைக்காக தன்னையே தியாகம் செய்யும் நடிகர், தமிழில் இல்லை, இந்தியாவில் இல்லை, ஹாலிவுட்டில் இல்லை, ஏன் இந்த உலகத்திலேயே இல்லை. ஒரு சீனியர் நடிகன் என்ற முறையில் விக்ரமை என் இதயத்தில் இருந்து பாராட்டுகிறேன்.

தொடரட்டும்

தொடரட்டும்

‘ஷங்கர் - விக்ரம்' இந்த காம்பினேஷன் தொடர்ந்து பல படங்களைக் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X