2.0: ஷங்கருக்காக ரஜினி எடுத்த 4வது அவதாரம் என்ன?: வீடியோ இதோ
சென்னை: 2.0 படத்தில் ரஜினி நான்கு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாகக் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்ஷய் குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படம் வரும் 29ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் மேக்கிங் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
அதன்படி ரஜினியின் கதாபாத்திரங்கள் குறித்த வீடியோ வெளியாகியுள்ளது.
ரஜினி
2.0 படத்தில் ரஜினி டாக்டர் வசீகரன், சிட்டி, 2.0 மற்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். அந்த நான்காவது கதாபாத்திரத்தை ரகசியமாக வைத்துள்ளனர். அது குறித்து தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் படத்தை தான் பார்க்க வேண்டும்.
மினிபாட்
ரஜினியின் நான்காவது கதாபாத்திரம் குறித்து வெளியாகியுள்ள வீடியோவில் நெக்ஸ்ட் என்ற சொல்லை சிறியதாக காட்டியுள்ளனர். ஒரு வேளை ரஜினி மினி ரோபோவாக நடித்துள்ளாரோ?
ஆவல்
ரஜினியின் நான்காவது கதாபாத்திரத்தை பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
கடின உழைப்பு
வயது என்பது வெறும் எண் தான். மனதளவில் நான் இன்னும் வாலிபனாகவே இருக்கிறேன் என்பதை நிரூபித்துள்ளார் ரஜினி.


Click it and Unblock the Notifications











