Rajini: சூப்பர் ஸ்டாரை சந்தித்த ரியல் மொய்தீன் பாய்... ரஜினிக்கு திடீர் சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலம்!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக அவர் கேமியோ ரோலில் நடித்திருந்த லால் சலாம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படத்தில் மும்பை தொழிலதிபராக நடித்திருந்தார் ரஜினி. இந்நிலையில் லால் சலாம் மொய்தீன் பாயை, ரியல் தொழிலதிபர் சந்தித்துள்ளார்.

Rajini: Lulu Mall owner Yusuf Ali met Rajini at his home

ரஜினியை சந்தித்த ரியல் மொய்தீன் பாய்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் லால் சலாம். இதில் மகள் ஐஸ்வர்யாவுக்காக கேமியோ ரோலில் நடித்திருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். மும்பை தொழிலதிபர் மொய்தீன் பாய் என்ற கேரக்டரில் ரஜினி மாஸ் காட்டியிருந்தார். ரஜினியின் இந்த மொய்தீன் பாய் கேரக்டர் அவரது பாட்ஷா படத்தை நினைவுப்படுத்தியதாக ரசிகர்கள் விமர்சனம் செய்திருந்தனர்.

ஆனாலும் லால் சலாம் படத்திற்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. லால் சலாம் படத்துக்கு முதல் நாளில் மட்டுமே சிறப்பான ஓபனிங் இருந்ததாகவும், அப்படி இருந்தும் கூட பாக்ஸ் ஆபிஸில் லால் சலாம் எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளதாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 10 நாட்கள் ஆகிவிட்ட போதும் லால் சலாம் மொத்தமே 15 கோடி வரை தான் கலெக்‌ஷன் செய்துள்ளது.

இந்நிலையில் லால் சலாம் தோல்வியை பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாத ரஜினிகாந்த், தற்போது வேட்டையன் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தையும் லைகா நிறுவனம் தான் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. வேட்டையன் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்ட நிலையில், ரஜினி சென்னையில் ஓய்வெடுத்து வருகிறார். இதனையடுத்து அவரை ரியல் மொய்தீன் பாயான தொழிலதிபர் சந்தித்து பேசியுள்ளார்.

ஐக்கிய அரபு நாடுகளில் லூலூ ஹைப்பர் மார்க்கெட் நிறுவி அதன் மூலம் பிரபல தொழிலதிபராக வலம் வருபவர் கேரளாவைச் சேர்ந்த யூசுப் அலி. இப்போது இந்தியாவிலும் திருவனந்தபுரம், கோவை என பல பகுதிகளில் தனது லூலூ ஹைப்பர் மார்க்கெட் கிளைகளை தொடங்கி வருகிறார். பல லட்சம் கோடிகளுக்கு அதிபதியான யூசுப் அலி, ஏராளமான சமூக சேவைகளையும் செய்து வருகிறார்.

இந்நிலையில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார் யூசுப் அலி. அப்போது யூசுப் அலிக்கு சால்வை அணிவித்து வரவேற்ற ரஜினிகாந்த், அவரிடம் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக மட்டுமே நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. லால் சலாம் படத்தில் மும்பை தொழிலதிபாராக நடித்திருந்த ரஜினியை ரியல் தொழிலதிபர் ஒருவர் சந்தித்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X