ட்விட்டரில் இணைந்த ரஜினி.. தொடரும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று சமூக வலைத்தளமான ட்விட்டரில் இணைந்தார்.
இதனை அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் மிக அதிக அளவு பயன்படுத்தப்படும் பெயர்களில் ஒன்றாக ரஜினிகாந்த் பெயரும் உள்ளது.
பேஸ்புக், ட்விட்டர் போன்றவற்றில் ரஜினி பெயரில் ஏராளமானோர் பக்கங்களைத் திறந்து செயல்பட்டு வருகின்றனர். ரஜினி இதுபற்றி எந்தக் கட்டுப்பாடும் விதிக்கவில்லை.

ட்விட்டரில் ஏற்கெனவே சூப்பர் ஸ்டார், ரஜினி, ரஜினிகாந்த் என்ற பெயர்களில் பக்கங்களைத் திறந்துள்ளனர் ரசிகர்கள். ஆனால் ரஜினி இதுவரை எந்த சமூக வலைத் தளத்தில் சேராமல் இருந்தார்.
அமிதாப், கமல் உள்ளிட்ட பிரபலங்கள் அத்தனை பேரும் இந்த வலைத் தளங்களில் இயங்கி வரும் நிலையில் இன்று திடீரென ட்விட்டரில் இணைவதாக ரஜினி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள வீடியோ பேட்டியில், "என் ரசிகர்கள் ஏராளமானோர் நான் சமூக வலைத் தளத்தில் இருக்க வேண்டும் என விரும்பினர். அவர்கள் விருப்பத்தை ஏற்று இன்று முதல் ட்விட்டரில் இணைகிறேன்," என்று கூறியுள்ளார்.
இப்படி அவர் அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ரஜினியைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களைத் தொட்டது.
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/e7ElMJMeSJU?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>
இன்றைக்குள் ஒரு லட்சத்தைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











