மனைவி, மகளுடன் சிகிச்சைக்காக ரஜினி சிங்கப்பூர் பயணம்

ஆரம்பத்தில் லண்டனுக்கு சென்று ரஜினிக்கு சிகிச்சை அளிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவ்வளவு தூரம் போவதற்குப் பதில் அருகாமையில் இருக்கும் சிங்கப்பூரிலேயே அதி நவீன வசதிகள் நிறைய கிடைப்பதால் அங்கு செல்லலாம் என தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரஜினியின் உடல் நிலையில் லேசான முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டு அங்கு இருக்கிறார். கடந்த நான்கு நாட்களாக அவர் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருந்து வருகிறார். கட்டுப்பாட்டுடன் கூடிய சாப்பாட்டை சாப்பிட்டபடி, டிவி பார்த்துக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறப்படுகிறது.
ரஜினிக்கு சிங்கப்பூரில் உள்ள பிரபலமான தேசிய சிறுநீரக பவுண்டேஷன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. இதற்காக இன்று இரவு மனைவி லதா ரஜினிகாந்த், மகள் ஐஸ்வர்யா ஆகியோருடன் ரஜினிகாந்த் சிங்கப்பூர் அழைத்துச் செல்லப்படுகிறார்.
இன்றிரவு 11 மணிக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் ரஜினியை அவரது குடும்பத்தினர் சிங்கப்பூர் அழைத்துச் செல்கின்றனர். அவர்களுடன் ராமச்சந்திரா மருத்துவமனை மருத்துவர் ஒருவரும் உடன் செல்கிறார்.


Click it and Unblock the Notifications











