அநாதைகளாக இருந்த என்னையும் ரஜினியையும் அரவணைத்தவர்கள் ரசிகர்கள்! - கமல்
சென்னை: அநாதைக் குழந்தைகளாக இருந்த என்னையும் ரஜினியையும் அரவணைத்துக் கொண்டவர்கள் ரசிகர்கள் என்றார் கமல் ஹாஸன்.
பத்மபூஷண் விருது பெற்ற கமல் ஹாஸன் நேற்று அச்சுப்பத்திரிகைகள், ஆன்லைன் ஊடகங்கள், தொலைக்காட்சிகள், பண்பலை என அனைத்து தரப்பினரையும் சந்தித்துப் பேசினார்.

புது ஹீரோக்கள்
அப்போது அவரிடம் தினம் ஒரு புது ஹீரோ வருவது ஆராக்கியமானதா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு கமல் அளித்த பதில், "தினம் ஒரு புது ஹீரோ வருவது ஆரோக்கியமான விஷயம் இல்லை என நான் இன்று நினைத்தால், அன்று ரஜினியோ, கமல்ஹாசனோ வந்திருக்க முடியாது.

அநாதைக் குழந்தைகள்
ரசிகர்களின் மனது விசாலமான வீடு. அதில் பல அனாதைகள் குடியேறலாம். அப்படி குடியேறிய அநாதைக் குழந்தைகள் தான் நானும், ரஜினியும்," என்றார்.

சமரசம் கிடையாது
எதற்காகவாவது சமரசம் அடைந்துள்ளீர்களா? என்று கேட்டதற்கு, "பொதுவாக நான் எந்த விஷயத்திலும் சமரசம் அடைவது கிடையாது. மனிதநேயத்தினால் செய்வேனே தவிர, எதையும் மிரண்டுபோய் செய்ததுகிடையாது. அன்பால் செய்வது எதுவும் பிழையாகாது" என்றார்.

ஒரே மனநிலைதான்
விஸ்வரூபம் பட விவகாரத்தின் போது, இதே இடத்தில் அமர்ந்துதான் பேசினீர்கள். இப்போதும் அதே இடத்தில் அமர்ந்து பேசுகிறீர்கள். இப்போது உங்கள் மனநிலை எப்படி உள்ளது?, என்று கேட்டபோது, "அப்போதும் இப்போதும் என் மனநிலை ஒரே மாதிரிதான் உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications











