ஹீரோ .. ஹீரோ ..

By Staff

தனது அடுத்த படத்தை வரும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி வெளியிட ரஜினி திட்டமிட்டு வருவதாகத்தெரிகிறது.

2004ம் ஆண்டு மே அல்லது ஜூன் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது. அந்த நேரத்தில் ஏப்ரல் 14ம்தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தனது அடுத்த படத்தை ரஜினி வெளியிடுவார் என்று அவருக்கு நெருக்கமானவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

படையப்பா வெளியாகி இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் பாபா வந்தது. ஆனால், படுதோல்வியடைந்தது.

மீண்டும் பாட்ஷா மாதிரி ஒரு மாபெரும் வெற்றிப்படமாகவும், அதிமுகவுக்கு ஒரு பாடமாகவும் அவரது அடுத்தபடம் இருக்கும் என்கிறார்கள். தமிழக அரசிலில் இதன் மூலம் அவர் புயலைக் கிளப்ப முடிவெடுத்துள்ளார் என்றுகூறப்படுகிறது.

அடுத்த படத்தை கே.எஸ்.ரவிக்குமார், ஹரி அல்லது தெலுங்கு இயக்குனர் தேஜா ஆகியவர்களில் ஒருவர்இயக்கலாம் என்று தெரிகிறது. தேஜா ஒரு விவசாயிகள் புரட்சிக் கதையைச் சொல்லியுள்ளாராம். அது ரஜினிக்குமிகவும் பிடித்துப் போனதாக சொல்கிறார்கள்.

இந் நிலையில் ரஜினிக்கு மிக வேண்டிய சினிமா நிறுவனங்கள் சார்பில் விவசாயி, வலது கை என்ற இரு பெயர்கள்பதிவு செய்யப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆரின் விவசாயி படத்துப் பின் இப்போது தான் இன்னொரு விவசாயி தலைப்புபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தலைப்பை ரஜினி பயன்படுத்த வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

மேலும், சமீபத்தில் திருச்சி வந்த ரஜினி ரசிகர் மன்ற சத்தியநாராயணா, அந்த மாவட்ட மன்ற நிர்வாகிகளுடன் நெடுநேரம் பேசினார். அப்போது அவர்களிடம் இந்த விவரங்களை சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.

தனது அடுத்த படத்தில் அரசியல் பிரவேசம் பற்றி தெளிவான நிலையை ரஜினி வெளியிடுவாராம். எப்படியும்அடுத்த ஏப்ரல் 14க்கு ரஜினி படம் நிச்சயமாகிவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X