ஹீரோ .. ஹீரோ ..

By Staff

ரஜினி தனது அடுத்த படத்தை விவசாயிகளைக் குறிவைத்தே எடுக்கப் போவதாக சொல்கிறார்கள். கதையின் கரு அவரது பெட் சப்ஜெக்டான நதிகள் இணைப்பு தான் என்கிறார்கள். ரஜினிக்கு இந்தக் கதையைச் சொன்னது தெலுங்கு சூப்பர் ஹிட் இயக்குனர் தேஜா.

அவருக்கு வேண்டிய சினிமா நிறுவனம் சமீபத்தில் விவசாயி என்ற தலைப்பை பிலிம் சேம்பரில் பதிவு செய்திருப்பதை நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். ஹரி, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் வழக்கமான ரஜினி டைப் கதைகள் சொல்ல, தெலுங்கில் காமெடி படங்களில் கொடி கட்டிப் பறக்கும் தேஜா தான் நதி நீர் இணைப்பை வைத்து அட்டகாசமான கதையைச் சொன்னாராம்.

கதை மிகவும் பிடித்துப் போய்விட தனது அடுத்த படத்தை ரஜினி முடிவு செய்துவிட்டாராம்.

தேஜாவை பெங்களூரில் வைத்து இருமுறை சந்தித்த ரஜினி, ஒருமுறை தனது நெருக்கமான நண்பர்களையும் வைத்துக் கொண்டு கதை குறித்து விவாதித்தார். பின்னர் கே.எஸ். ரவிக்குமாரையும் பெங்களூர் அழைத்து வந்து தேஜா சொன்ன கதை குறித்து நண்பர்களுடன் பேசினார்.

அனைவருக்கும் கதை பிடித்துப் போய்விடவே, குடும்பத்தோடு ஹைதராபாத் சென்ற ரஜினி தனது மகள்கள், மனைவி சகிதம் தேஜாவுடன் விவாதம் நடத்தினார்.

இதனால் விரைவில் விவசாயி நாமகரணத்துடன் ரஜினியின் அடுத்த படத்துக்கு பூஜை போடப்படலாம்.

  • தேர்தலை குறி வைத்து ரஜினியின் அடுத்தபடம்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X