ஹீரோ .. ஹீரோ ..

By Staff

ரஜினிகாந்துக்காக ஒரு அட்டகாசமான கதையை தயார் செய்துள்ளாராம் இயக்குனர் சூர்யா.

ஸ்ரீதேவி தயாரிக்க, இப்போது சிம்ரன், கிரணை வைத்து நியூ படத்தை எடுப்பதில் பிஸியாக இருக்கும் சூர்யா,அதை தெலுங்கிலும் நானி என்ற பெயரில் எடுத்து வருகிறார்.

பிஸி செட்யூலுக்கு இடையிலும் அவர் தயாரித்துள்ள கதை தான் 20-40-60. படத்திற்கு டைட்டிலும் அதேதானாம்.

டைட்டிலைப் பார்த்துவிட்டு இது ஏதோ பெண்ணின் சைஸ் என்று நினைத்துவிட வேண்டாம். ஒரு மனிதன் தனது20, 40, 60 வயதில் சந்திக்கும் அனுபவங்கள் தான் கதையாம். 20 வயதில் ஜாலியாகத் திரிந்துவிட்டு, 40ல் குடும்பச்சுமையோடு பொதுச் சேவையிலும் இறங்கி, தனது தொண்டினால் 60 வயதில் சமூகத்தில் உச்ச நிலையை அடையும்ஒரு மனிதனின் கதையாம்.

இந்தக் கதைக்கு ரஜினி தான் மிகச் சரியாக இருப்பார் என்று அடித்துச் சொல்கிறார் சூர்யா. நல்ல கதைக்காக ரஜினிஅலைந்து கொண்டிப்பதால், தனது இந்த 20-40-60 கதையை எடுத்துக் கொண்டு ரஜினியிடம் ஓடினாராம் சூர்யா.

கதை ரஜினிக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது என்கிறார்கள். ஏகப்பட்ட திருப்பங்கள், பரபரப்புகளுடன்கூடிய இந்தக் கதையை சூர்யா விளக்க ரஜினி மெய்மறந்து போனாராம். முழுக் கதையையும் கேட்டுவிட்டுசூர்யாவின் கையைப் பிடித்துக் கொண்டாராம்.

பென்டாஸ்டிக் என்று பாராட்டியதோடு, பார்க்கலாம், கொஞ்சம் பொறுத்திருங்க என்று கூறி அனுப்பிவைத்திருக்கிறார். இதனால் மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார் சூர்யா.

ஏற்கனவே ஹரி, தெலுங்கு இயக்குனர் தேஜா ஆகியோர் ஆளுக்கு ஒரு கதை சொல்லி ரஜினியின் அடுத்த படத்தைஇயக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருக்க, கே.எஸ். ரவிக்குமாரும் எப்படியும் பழம் நழுவி நம் கையில் தான் விழும்என்று நம்பிக் கொண்டிகுக்கும் நிலையில் சூர்யாவும் இந்தப் போட்டியில் புகுந்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X