ஹீரோ .. ஹீரோ ..
நடிகர் ரஜினிகாந்த் நேற்றிரவு திருவண்ணாமலையில் கிரிவலம் செய்தார். அவரைப் பார்த்து ரசிகர்கள் சூழ்ந்துகூட்ட நெரிசல் ஏற்பட்டதால் கிரிவலத்தை இடையிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டார்.
நேற்று அகில இந்திய ரஜினிகாந்த் நற்பணி மன்ற தலைவர் சத்திய நாராயணா திருவண்ணாமலை வந்தார்.ரஜினியின் வருகைக்கான ஏற்பாடுகள் செய்தார். இந் நிலையில் மலையில் ரஜினியும் திருவண்ணாமலை வந்துசேர்ந்தார்.
திரிசூல் ஹோட்டலில் சிறுது நேரம் ஓய்வெடுத்த ரஜினி இரவு 8 மணியளவில் மலையைச் சுற்றி நடக்கஆரம்பித்தார். அப்போது அவரைப் பார்த்துவிட்ட ரசிகர்கள்ளும், பொது மக்களும் அடி அண்ணாமலை கோவில்அருகே ரஜினியை சூழ்ந்து கொண்டனர்.
இதைப் பார்த்த ரஜினி தன்னைத் தொடர்ந்து வந்த ரசிகர் மன்ற நிர்வாகியின் டூ வீலரில் ஏறி அங்கிருந்து பறந்தார்.சிறுது தூரத்தில் நின்றிருந்த தனது காரில் ஏறி மீண்டும் ஹோட்டலுக்கே சென்றுவிட்டார்.
இதையடுத்து இன்று அதிகாலை 4 மணியளவில் அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ரஜினிகாந்த் வந்தார். பின்னர்அங்கு நடந்த கோ பூஜையில் கலந்து கொண்டார்.
அண்ணாமலையார்-உண்ணாமுலையம்மனுக்கு பாலாபிஷேகம் செய்த ரஜினி, கோவிலில் பக்தர்கள் கூடும் முன்அங்கிருந்து வெளியேறி, சென்னை திரும்பினார்.
ரசிகர்கள், பொது மக்கள் தொல்லையால் கிரிவலத்தை அவரால் முடிக்க முடியவில்லை.


Click it and Unblock the Notifications











