ஹீரோ .. ஹீரோ ..
ரஜினியின் கெஸ்ட் ஹவுஸான அருணாச்சலா இருந்த இடத்தில் இப்போது அருணாச்சலா-இன் என்ற விடுதியுடன்கூடிய ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலை ரஜினியே இன்று துவக்கி வைத்தார்.
சென்னை கோடம்பாக்கம் ஹைவேயில் உள்ள இந்த அருணாச்சலா கெஸ்ட் ஹவுசை தனது படத்தின் கதைடிஸ்கஷனுக்கு பயன்படுத்தி வந்ததோடு, பிற படங்களின் டிஸ்கஷனுக்கும் வாடகைக்கு விட்டு வந்தார் ரஜின.
இந் நிலையில் இதை வசந்த் பவன் ஹோட்டல் அதிபர் ரவிக்கு குத்தகைக்குத் தந்துவிட்டார். இப்போது அங்குஅருணாச்சலா-இன் என்ற ஹோட்டலை ஆரம்பித்துள்ளார் ரவி. இந்த ஹோட்டலை ரஜினி இன்று(வெள்ளிக்கிழமை) திறந்து வைத்து வியாபாரத்தையும் துவக்கி வைத்தார்.
சமீபத்தில் நாசிக்கில் நடந்த கும்பமேளாவில் கலந்து விட்டுத் திரும்பியுள்ளார் ரஜினி. அங்கு நடந்த கூட்டநெரிசலில் 41 பேர் பலியான நாளுக்கு முதல் நாளே தனது புனித நீராடலை முடித்துவிட்டுத் திரும்பிவிட்டாராம்ரஜினி.


Click it and Unblock the Notifications











