ஹீரோ .. ஹீரோ ..
ரஜினிகாந்த் தனது புதிய படம் குறித்து முடிவு செய்து விட்டார் என்கிறது கோலிவுட்டின் லேட்டஸ்ட் கிசு கிசு.
பாபா தோல்விக்குப் பிறகு அமைதி காத்து வரும் ரஜினி அடுத்தப் படம் குறித்து இதுவரை வாய் திறக்காமல்உள்ளார். அவர் எப்போது வாய் திறப்பார் என்று அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது, கோலிவுட்டும் காத்துக்கிடக்கிறது.
அவ்வப்போது ரஜினியின் புதிய படம் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டேதான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போது உலவும் செய்திப்படி ரஜினி தனது புதிய படம் குறித்து முடிவு செய்து விட்டார்.
வரும் ஜனவரி மாதம் தனது புதிய படத்தைத் தொடங்க ரஜினி திட்டமிட்டுள்ளாராம். ஏப்ரல் 14ம் தேதி, தமிழ்ப்புத்தாண்டு தினத்தன்று படத்தை ரிலீஸ் செய்வதாகத் திட்டமாம்.
ஒரு பாமரன், அரசியல்வாதிகளால் பாதிக்கப்படுகிறான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து கடைசியில் பொங்கிஎழுந்து பழி வாங்குகிறான். இதுதான் படத்தின் ஒன்லைன் கதையாகும்.
படத்தை இயக்கப் போவது, யார் என்பதில்தெளிவான தகவல் இல்லை.
பாபா தோல்வியைக் கொடுத்ாலும் அதை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாதான் ரஜினியின் முதல் சாய்ஸ்என்கிறார்கள். அதேசமயம், கே.எஸ்.ரவிக்குமாரையும் ஹரியையும் மறுப்பதற்கில்லையாம்.
படத்திற்கு இசையமைக்கப் போவது இளையராஜா என்பது மட்டும் முடிவாகிவிட்டது.பிதாமகனில்இளையராஜாவின் பின்னணி இசையைப் பார்த்து விட்டு பிரமித்து விட்டாராம் ரஜினி. என் அடுத்த படத்திற்குராஜாதான் இசை என்று பிதாமகன் சிறப்புக் காட்சியைப் பார்த்து விட்டு வெளியே வரும்போது உடன் வந்தநெருக்கமான நண்பர்களிடம் கூறினாராம்.


Click it and Unblock the Notifications











