ஹீரோ .. ஹீரோ ..
தீபாவளியையொட்டி கமலின் சண்டியர் படம் வெளியாகப் போவதால் அதே நாளில் தனது படத்தையும் ரிலீஸ்செய்ய ரஜினி திட்டமிட்டுள்ளார்.
வரும் மே 19ம் தேதி புதிய படத்துக்கு பூஜை போடப்படும் என்று தெரிகிறது.
பாபா ஊத்துக்குப் பின் கொஞ்ச காலமாய் அமைதியாய் இருந்தார் ரஜினி.
சமீப காலமாய் கே.எஸ்.ரவிக்குமாருடன் கதை விவாதித்தில் ஈடுபட்டு வந்தார். ஆனாலும் படம் எடுப்பதில் வேகம் காட்டவில்லை.
இப்போது வீரப்பனுக்கு பணம் கைமாறிய விஷயத்தில் ரஜினியையும் மாட்டிவிட தமிழக அரசு முயற்சி செய்துவருவதால் ஜெயலலிதாவுக்கு செக் வைக்க ரஜினி திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தனது அடுத்த படத்தை உடனடியாத் துவங்கவும் முடிவு செய்துள்ளார்.
அதில் தமிழக அரசைசுட்டெரிக்கும் வசனங்கள் இடம் பெறும் என்று தெரிகிறது.
இந்தப் படத்தை சண்டியர் வெளியாகும் தீபாவளி தினத்தன்றே வெளியிடவும் முடிவு செய்துள்ளார்.
இதில் ரஜினிக்கு ஜோடியாய் 3 பேர் நடிப்பார்கள். ஒருவர் ஐஸ்வர்யா ராய், இன்னொருவர் எல்லோரும் எதிர்பார்த்தமீனா. அடுத்தவர் எல்லோரும் ரொம்பவே எதிர்பார்த்த ரம்யா கிருஷ்ணனாம்.
டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமாரே தான். படம் தெலுங்கிலும் டப் செய்யப்படுமாம்.


Click it and Unblock the Notifications











