ஹீரோ .. ஹீரோ ..
சிவசக்தி பாண்டியன் தயாரிக்கும் அடுத்த படம் ராமகிருஷ்ணா. 45 நாட்களில் படத்தை முடிக்கத் திட்டமிட்டுகளம் இறங்கியுள்ளார்களாம்.
இதில் ஒரு சுவாரஸ்யமான தகவல். ராமகிருஷ்ணா என்ற வைக்கப்பட்டுள்ள படத்தின் டைட்டில், ஏற்கனவேரஜினியால் புக் செய்யப்பட்டிருந்ததாம். இதையடுத்து ரஜினியை அணுகினார் பாண்டியன்.
அவரிடம் கதையைக் கேட்ட ரஜினி, அதில் இம்ப்ரஸ் ஆகிவிட டைட்டிலை தாரை வார்த்து குட்-லக் சொல்லிஅனுப்பினாராம். பார்ப்பவர்களிடமெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறார் சிவசக்தி பாண்டியன்.
டான்ஸ் ஆடிய டப்பா !!
மீண்டும் நடனத்திலேயே தஞ்சமடைந்து விட்டார் பிரபு தேவா.
புயல் வேக டான்ஸ் அசைவுகளால் தமிழ் திரையுலகை ஆக்கிரமித்து, இந்திய அளவில் ரசிகர்களை வசீகத்தபிரபுதேவா நடிப்புக்கு மாறினார். விறுவிறுவென படங்கள் வந்தாலும் எந்தப் படமும் இவரது மார்க்கெட்டைஸ்டெடி செய்யவில்லை.
நிலைமை மோசமாகி இப்போது கைவசம் இருப்பது அலாவுதீன் மற்றும் சந்தோஷ வானிலே மட்டுமே. இதில்சந்தோஷ வானிலே இன்னும் சூட்டிங்கே தொடங்கவில்லை. இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக புதுமுகம் ஸ்ரீயா.ஆனால், படம் தொடங்குதற்கான அறிகுறியே இல்லை.
அலாவூதீன் ரொம்ம்பபப.. நாளாகத் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தேவாவுக்கு ஜோடி ஆஷிமா. இந்தப் படம்அற்புத விளக்காய் மாறி ஏதாவது மாயாஜாலம் செய்தால் தவிர தனக்கு இனி நடிக்க சான்ஸே கிடைக்க வாய்ப்பேஇல்லை என்பதை உணர்ந்துவிட்டார் பிரபுதேவா.
இதனால் இதுவரை தானே ஒதுக்கி வைத்திருந்த டான்ஸ் பக்கம் மீண்டும் பார்வையைத் திருப்பியுள்ளார். டான்ஸ்மாஸ்டர் என்ற போர்டை தூசி தட்டி எடுத்துக் கொண்டு மும்பை பக்கம் போய் இந்திப் படங்களில் சான்ஸ் பிடித்துவருகிறார். அங்கு சில படங்களுக்கு நடனம் அமைத்து வரும் தேவா, சிம்ரன் லெவலில் சிங்கிள் பாட்டுக்கும்டான்ஸ் ஆடவும் செய்கிறார்.
ஆனால், தமிழில் இப்போதைக்கு தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றப் போவதில்லையாம்.
அலாவூதினுக்குப் பிறகும் நடிக்க சான்ஸே வராவிட்டால் தான் தமிழிலும் டான்ஸ் மாஸ்டர் வேலையை மீண்டிம்ஆரம்பிப்பாராம்.


Click it and Unblock the Notifications











