»   »  திருப்பதியில் ரஜினிகாந்த்

திருப்பதியில் ரஜினிகாந்த்

Posted By:
Subscribe to Oneindia Tamil


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், திருப்பதியில் நேற்று சிறப்பு தரிசனம் செய்து வழிபட்டார்.


நடிகர் ரஜினிகாந்த், தீவிர ஏழுமலையான் பக்தர். தனது படங்கள் திரையிடப்படுவதற்கு முன்பும், வெளியான பின்னரும் திருப்பதிக்கு சென்று வழிபடுவது ரஜினியின் வழக்கம்.

சிவாஜி வெளியீட்டுக்கு முன்பும் அவர் திருப்பதி சென்று சாமி கும்பிட்டார். இந்த நிலையில் சிவாஜி மாபெரும் வெற்றிப் படமாகியுள்ள நிலையில், நேற்று திருப்பதிக்கு வந்தார்.

இரவில் கோவிலுக்கு வந்த அவர், கோவிலுக்கு வழங்குவதற்காக ஒரு சாமி சிலையையும் கையோடு கொண்டு வந்து கோவிலில் அதை ஒப்படைத்தார்.

வரிசையில் நின்று ரஜினி காந்த் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் சிறப்புப் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

சாமி கும்பிட்ட பின்னர் உடனடியாக கார் மூலம் சென்னைக்குக் கிளம்பிச் சென்றார்.

திருப்பதி கோவிலுக்கு வந்த ரஜினி தரிசனம் முடித்தவுடனே சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.

Read more about: rajini

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil