பாலு மகேந்திராவுக்கு நண்பர்கள் மூலம் மலர் வளையம் அனுப்பி அஞ்சலி செலுத்திய ரஜினி!
சென்னை: இயக்குநர் பாலு மகேந்திராவுக்கு தன் நெருங்கிய நண்பர்கள் மூலம் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் சூப்பர் ஸ்டார் ரஜினி.
ரஜினி நடித்த முள்ளும் மலரும் படத்துக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் பாலு மகேந்திரா. பின்னர் ரஜினியை வைத்து உன் கண்ணில் நீர் வழிந்தால் என்ற படத்தை இயக்கினார்.

இருவரும் நெருக்கமான நண்பர்களாகவும் இருந்தனர். நேற்று பாலு மகேந்திரா மறைந்த செய்தி ரஜினியை அறிந்து வருத்தமும் ஆழந்த வேதனையும் தெரிவித்தார் ரஜினி.
பாலு மகேந்திராவின் உடலை நேரில் பார்த்தால் ரஜினி மனதளவில் மிகுந்த வேதனைக்குள்ளாவார் என்பதால், கடைசி நேரத்தில் ரஜினியைத் தடுத்து நிறுத்திவிட்டனர்.
ஆனாலும் தனது நெருங்கிய நண்பர்கள் இயக்குநர் நட்ராஜ், ரஜினி மன்ற பொறுப்பாளர் சுதாகர் ஆகியோர் மூலம் மலர் வளையம் அனுப்பி ரஜினி சார்பில் பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தனது நெருங்கிய நண்பர் இயக்குநர் மணிவண்ணன் மரணத்தின்போதும் ரஜினி நேரில் வரவில்லை. ஆனால் அவர் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











