twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தேர்தல் 2011... ரஜினி 'கிரேட் எஸ்கேப்'!

    By Shankar
    |

    Rajinikanth
    1994-லிருந்து தேர்தல் என்று அறிவிப்பு வந்த கையோடு, பேசப்படும் இன்னொரு பெயர் ரஜினி வாய்ஸ்.

    ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் ரஜினி அரசியலுக்கு வருவாரா என அலசல் கட்டுரைகள் வெளியிடுவதும், தேர்தல் நெருங்கும் நேரத்தில் ரஜினி வாய்ஸ் யாருக்கு என்று கேள்வி எழுப்புவதும் தமிழ் மீடியா உலகின் வாடிக்கை.

    இந்த முறையும் தேர்தல் நேரம் வந்துவிட்டது. நிச்சயம் அவர் இப்போதைக்கு அரசியலுக்கு வரும் அறிகுறிகள் கூட தெரியவில்லை. அதேபோல இந்த முறை, தேர்தல் நேரத்தில் யாருக்கும் அவர் வாய்ஸ் கொடுக்கும் திட்டமும் இல்லையாம்.

    எதற்கு வம்பு என்று, இந்த ஆண்டு அவர் இந்தியாவிலேயே இருக்க மாட்டார் என்கிறது ரஜினிக்கு நெருக்கமான வட்டாரம்.

    அடுத்து ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் ராணா படத்தின் ஷூட்டிங் பிரிட்டனில் நடக்கிறது. படத்தின் 40 சதவீத படப்பிடிப்பு, லண்டன், வேல்ஸ், பர்மிங்ஹாம் அரண்மனை போன்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் நடக்க உள்ளது.

    எனவே மார்ச் மாதம் தொடங்கி, மே வரை இந்தப் படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் ரஜினி, தேர்தலில் வாக்களிக்க மட்டும் சென்னைக்கு வந்து போவார் என்கிறார்கள்.

    இடையில் தேர்தல் தொடர்பாக எந்தக் கருத்தும் / வாய்ஸும் தரும் திட்டத்தில் அவர் இல்லையாம். எந்திரனுக்குப் பின் ரசிகர்களைச் சந்திப்பதாகக் கூறியிருந்த அவர், அந்த சந்திப்பையும் மே மாதத்துக்குப் பிறகு தள்ளிப் போட்டிருப்பதாக தெரிகிறது.

    சமீபத்தில் நடந்த என்டிடிவி விருது வழங்கும் விழாவில் அரசியல் திட்டம் பற்றி கருத்து கேட்டபோது, நோ கமெண்ட்ஸ் என்றார் ரஜினி. இரு தினங்களுக்கு மும்பை விமான நிலையத்தில் அவரை திடீரென்று சந்தித்த ஒரு மூத்த பத்திரிகையாளர், 'அரசியல் பற்றிய ஐடியாவே உங்களுக்கு இல்லையா?' என்று கேட்டதற்கு, 'நோ கமெண்ட்ஸ் என்றுதானே சொல்கிறேன். நோ ஐடியா என்று சொல்லவில்லையே' என்றாராம்!

    English summary
    Rajini, the superstar of Indian Cinema is planning to camp in London for 3 months and attended the shooting of the same. This is his idea of avoiding unnecessary political noises around him during the assembly election in May.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X