சிரிச்சு சிரிச்சு எஞ்சாய் பண்ணேன்…! நெல்சனை பாராட்டிய ரஜினி!
ரஜினிகாந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தை பாரட்டியுள்ளார்.
Recommended Video

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கோலமாவு கோகிலா திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் ஆன கோலமாவு கோகிலா திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நயன்தாரா யோகி பாபு கூட்டணியில் படம் முழுக்க நகைச்சுவை வெள்ளத்தில் மிதப்பதாக ரசிகர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் மிகச்சிறப்பாக இருப்பதாக பாராட்டியுள்ளார்.
இயக்குனர் நெல்சன் திலீப்குமாருக்கு போன் செய்து பேசிய ரஜினிகாந்த், எனக்கு மிகவும் பிடித்தது. சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது என பாராட்டியுள்ளார். ரஜினியின் இந்த தொலைபேசி அழைப்பையும், பாராட்டையும் கொஞ்சமும் எதிர்பார்க்காத நெல்சன் ஒரு கணம் திகைத்துவிட்டாராம்.
என்ன பேசுவதென்றே தெரியாமல் திகைத்த நெல்சன் வாழ்க்கையில் மிகச்சிறந்த தருணம் என பெருமிதம் கொள்கிறார். லைக்கா புரடொக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications











