ரஜினி ரெகமன்ட்: கே எஸ் ரவிக்குமார் படத்தில் ஹீரோ- கம்- வில்லனான சுதீப்!

By Shankar

கேஎஸ் ரவிக்குமார் அடுத்து இயக்கும் புதிய படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சுதீப். வில்லன் ரோலையும் அவரே செய்கிறார்.

இந்த அளவு வெயிட்டான ரோல் அவருக்குக் கிடைக்க வேறு யார் காரணமாக இருக்க முடியும்... சூப்பர் ஸ்டார் ரஜினிதான்.

ரஜினி ரசிகர்

ரஜினி ரசிகர்

சுதீப் அடிப்படையில் ஒரு ரஜினி ரசிகர். கர்நாடகத்தில் பிறந்தாலும், பெரும்பாலான நாட்களை சென்னையில் கழித்தவர். நன்றாக தமிழ் பேசுபவர்.

ரஜினியை ரசித்தாலும், அவருடன் ஒருமுறை கூட பேசும் வாய்ப்பு சுதீப்புக்கு கிடைத்ததில்லையாம், நான் ஈ வரும் வரை.

ரஜினி பாராட்டு

ரஜினி பாராட்டு

நான் ஈ'யில் சுதீப்பின் நடிப்பைப் பார்த்த ரஜினி, சுதீப்பின் நம்பரை தன் நண்பர் மூலம் பெற்று போன் செய்து பாராட்டி, சுதீப்பை திக்குமுக்காட வைத்தது நினைவிருக்கலாம். ரஜினியின் அந்த பாராட்டே, இப்போது சிபாரிசாக மாறியிருக்கிறது.

கேஎஸ் ரவிக்குமார்

கேஎஸ் ரவிக்குமார்

ரஜினியின் லேட்டஸ்ட் படமான கோச்சடையானை இயக்குவது செளந்தர்யா என்றாலும், படத்தின் கதை திரைக்கதை வசனம், இயக்க மேற்பார்வை அனைத்துக்கும் ரவிக்குமார்தான் பொறுப்பு. இந்தப் படத்தில் ரவிக்குமாரின் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டன.

புதிய படம்

புதிய படம்

அடுத்து தமிழ் - தெலுங்கில் புதிய படம் இயக்குகிறார் கேஎஸ் ரவிக்குமார். இந்தப் படத்துக்கு ஹீரோவாக ரஜினியே சிபாரிசு செய்த பெயர் சுதீப். 'இந்தப் பையன்கிட்ட விஷயமிருக்கு. நல்லா கஷ்டப்பட்டு நடிக்கிறான். அடுத்த படத்துக்கு யூஸ் பண்ணிக்கங்க," என ரவிக்குமாரிடம் ரஜினி கூறினாராம்.

உடனடி ஒப்புதல்

உடனடி ஒப்புதல்

விஷயத்தை சுதீப்பைத் தொடர்பு கொண்டு கூறினாராம் கேஎஸ் ரவிக்குமார். சுதீப்புக்கு தலைகால் புரியாத சந்தோஷம். உடனடியாக சம்மதம் சொன்ன அவர், கதை கூட சொல்லத் தேவையில்லை சார் என்றாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X