என்ன ரஜினி சார், தப்பு தப்புன்னு சொல்லிக்கிட்டு அதே தப்பையே திரும்பத் திரும்ப செய்கிறீர்களே?
Recommended Video

சென்னை: மகள்களை விட சின்னவரான சோனாக்ஷி சின்ஹாவுடன் நடித்தது தவறு என்று தற்போது ஃபீல் செய்துள்ளார் ரஜினிகாந்த்.
லிங்கா படத்தில் ரஜினிகாந்த் தனது நண்பரின் மகள் அதுவும் தனது மகள்களை விட சின்னவரான சோனாக்ஷி சின்ஹாவுடன் டூயட் பாடினார். நண்பனின் மகளுடன் எப்படி இவரால் டூயட் பாட முடிகிறது என்று பலரும் வியந்தனர்.
இந்நிலையில் காலா இசை வெளியீட்டு விழாவில் இது குறித்து அவர் பேசியுள்ளார். விழாவில் ரஜினி கூறியதாவது,

லிங்கா
லிங்கா கதையை கேட்டதுமே நடிக்க ஒப்புக் கொண்டேன். அது அருமையான கதாபாத்திரம். அதில் இரண்டு விஷயத்தை நான் தெரிந்து கொண்டேன். ஒன்று நல்லவனா இருக்கணும் ஆனால் ரொம்ப நல்லவனா இருக்கக் கூடாது. அது படத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி. ரொம்ப நல்லவனாக இருப்பது ஆபத்து. ரொம்ப நல்லவனாக இருந்தால் கோழை என்று நினைத்துக் கொள்வார்கள்.

சோனாக்ஷி
இரண்டாவது வந்து எனக்கு 65 வயது. 45 வயது கதாபாத்திரம் பண்ணலாம், இல்ல ஒரு 40 வயது கதாபாத்திரம் பண்ணலாம். ஆனால் 30, 35 வயது கதாபாத்திரத்தில் நடித்து என் மகள்களை விட சின்னக் குழந்தையான சோனாக்ஷி சின்ஹா அவங்கள ஹீரோயினாக போட்டு டூயட் பாடியது எப்படி இருக்கும். இது நல்லா இருக்காது, இத்துடன் நிறுத்திக்கலாம் என்று இருந்தேன் என்றார் ரஜினிகாந்த்.

ஏமி
சோனாக்ஷி சின்ஹாவுடன் ஜோடி சேர்ந்தது தவறு என்று ரஜினிக்கு தற்போது தான் புரிகிறதா. அப்படி புரிந்திருந்தால் சோனாக்ஷியை விட சின்னவரான ஏமி ஜாக்சனுடன் ஏன் நடித்தாராம் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹூமா குரேஷி
பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹூமாவும் ரஜினியின் மகள்களை விட சின்னவர் தான்.

ரஜினி
மகள்களை விட சிறியவருடன் ஜோடி சேர்ந்தது தப்பு தப்புன்னு சொல்லிக் கொண்டு மீண்டும் மீண்டும் அதே தப்பையே செய்கிறார் ரஜினிகாந்த். அவர் சொல்வது ஒன்று செய்வது ஒன்றாக இருக்கிறது என்று விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











