படபிடிப்பில் நிஜமாக கண்கலங்கிய ரஜினி

ரஜினி 9 வயதில் தாயை இழந்தவர். அதன் பின்னர் அவரது அண்ணன்தான் வளர்த்துள்ளார். அண்ணியே அவரது தாயாக இருந்துள்ளார். தனது அண்ணி பற்றி குறிப்பிடும்போதெல்லாம் தாய் என்று தான் குறிப்பிடுவார் அப்படிப்பட்ட ரஜினி படபிடிபிடிப்பில் ஒரு சம்பவத்துக்காக அழுதுள்ளார்.

ஆரம்பகால போராட்ட வாழ்க்கை

ஆரம்பகால போராட்ட வாழ்க்கை

ரஜினி காந்த் ஆரம்ப காலத்தில் கண்டக்டராக இருந்து பின்னர் நடிப்புக்கல்லூரியில் சேர சென்னை வந்து பயிற்சி பெற்று அதன்பின்னர் பல போராட்டங்களுக்கு இடையே பாலசந்தர் மூலம் வாய்ப்புகள் பெற்றார். ஆனாலும் கதாநாயகனாக நடிக்க பல ஆண்டுகள் ஆனது.

வில்லனாக தொடங்கிய திரை வாழ்க்கை

வில்லனாக தொடங்கிய திரை வாழ்க்கை

ஆரம்பத்தில் வில்லனாக நடித்தார், அவர் வில்லனாக கலக்கினார். வில்லன் வேடத்தில் தனி மேனரிசம் ஏற்படுத்தி தனித்தன்மையுடன் கலக்கினார். வாயில் சிகரெட்டைப்போட்டு பிடிப்பது, வானத்தைப்பார்த்து சிரிப்பது என அவரது வில்லன் ஸ்டைல் மிகவேகமாக இளஞர்களிடையே பரவியது.

தேவர் பிலிம்ஸில் நடிக்க வாய்ப்பு

தேவர் பிலிம்ஸில் நடிக்க வாய்ப்பு

ரஜினி பிரபலமாக ஆரம்பித்து ஓரிரண்டு படங்களில் கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு வந்தது. எம்ஜிஆர் முதல்வர் ஆனதால் அவர் நடிக்காமல் விட்ட ஒரு படத்தை ரஜினியை வைத்து இயக்கியது தேவர் பிலிம்ஸ் தாய் மீது சத்தியம் என்கிற அப்படம் ரஜினியின் நடிப்பால் வெற்றி பெற்றது.

தேவர் பிலிம்ஸ் கதாநாயகன்

தேவர் பிலிம்ஸ் கதாநாயகன்

அதனால் தேவர் பிலிம்ஸின் கதாநாயகனாக ரஜினி மாறினார். தேவர் பிலிம்ஸ் அடுத்து மா என்கிற இந்திப்படத்தை தழுவி எடுத்த அன்னை ஓர் ஆலையம் படத்தில் ரஜினி நடித்தார். தனது தாய் மீது மிகுந்த பாசம் வைத்துள்ள ரஜினி வேட்டையாடி விலங்குகளை பிடித்து விற்பவராக இருப்பார். அவரது தாயார் அதை கண்டிப்பார்.

தாய் மரணமும் வேண்டுகோளும்

தாய் மரணமும் வேண்டுகோளும்

ஒரு கட்டத்தில் ஒரு குட்டியானையை தாயைப்பிரித்து சர்க்கஸ் கம்பெனிக்கு விற்பார், இதை தாய் கண்டிப்பார். ரஜினி இல்லாத நேரத்தில் தாய் அஞ்சலி தேவியை யானை தூக்கி போட்டுவிடும். தாயாரை மடியில் வைத்து ரஜினி கதறுவார். அப்போது தாய் அஞ்சலிதேவி குட்டியானையை தாய் யானையிடம் சேர்க்க சொல்லி உயிர் விடுவார்.

டி.எம்.எஸ்-சின் அற்புதமான பாடல்

டி.எம்.எஸ்-சின் அற்புதமான பாடல்

தாயார் இறந்தவுடன் அவர் சிதைக்கு தீ மூட்டும்போது ரஜினி கதறி அழுவார். அதன் பின்னணியில் ரசிகர்களை கட்டிப்போட்ட வெண்கல குரலோன் டி.எம்.எஸ் -சின் அம்மா நீ சுமந்த பிள்ளை, சிறகொடிந்த கிள்ளை என்கிற பாடல் ஒலிக்கும். மிகவும் அற்புதமான பாடல். பாடலில் அழுதபடி தனது வேட்டைத்தொழிலை கைவிடும் ரஜினி விலங்குகளை அவிழ்த்துவிடும் காட்சிகள் இருக்கும்.

உண்மையாக அழுத ரஜினி

உண்மையாக அழுத ரஜினி

அந்தக்காட்சியில் நடிக்கும் போது ரஜினி கண்கலங்கி அழுதுள்ளார். பின்னர் பேட்டியில் கூறிய ரஜினி நான் சிறுவயதில் தாயை இழந்தவன் எனக்கு தாயாக அண்ணி இருந்துள்ளார். அன்னை ஓர் ஆலயத்தில் அந்தப்பாடலை டி.எம்.எஸ் குரலில் கேட்கும்போது நடிக்கவில்லை தன்னை அறியாமல் தன் தாயார் ஞாபகம் வந்து அழுதுள்ளார்.

Recommended Video

Superstar Rajini Birthday Special | Best of Thalaivar Styles, Punch, comedies | Filmibeat Tamil
தாயின் சிறப்பை விளக்கும் பல பாடல்கள் வந்தாலும் அது தனி பாடல்

தாயின் சிறப்பை விளக்கும் பல பாடல்கள் வந்தாலும் அது தனி பாடல்

அதன்பின்னர் ரஜினி மன்னன் உள்ளிட்ட பல படங்களில் தாயாரின் சிறப்பை விளக்கும் பாடல்களில் நடித்தாலும் இளம் நடிகராக அதுவும் டி.எம்.சவுந்தரராஜனின் உணர்ச்சிமிகு குரலில் கேட்டபோது அழுதது இயல்பே. ரஜினி மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X