என்னால முடியல, என்னை விட்டுடுங்க என்ற ரஜினி: விட மறுத்த ஷங்கர்
Recommended Video

சென்னை: உடல்நிலை காரணமாக 2.0 படத்தில் இருந்து வெளியேறுவதாக ரஜினி ஷங்கரிடம் தெரிவித்துள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஏமி ஜாக்சன், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள 2.0 படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியிடப்பட்டது. ட்ரெய்லரை சும்மா அதிர விட்டிருக்கிறார்கள்.
ட்ரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது,

ஹிட்
2.0 படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகப் போகிறது. சுபாஷ்கரன், ஷங்கருக்கு என் வாழ்த்துக்கள். ஒரு படத்தில் கிட்டத்தட்ட ரூ. 600 கோடி முதலீடு செய்த சுபாஷ்கரனை வாழ்த்துகிறேன். அவர் ரஜினி, அக்ஷய் குமார் அல்ல ஷங்கரை நம்பி பணம் போட்டார். ரசிர்கள், தயாரிப்பாளர்களை திருப்திபடுத்த தவறாதவர் ஷங்கர். அவர் இந்தியன் ஜேம்ஸ் கேமரூன், ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்.

கதை
ஷங்கர் சார் வந்து என்னிடம் கதை சொன்னார். அவருடன் ஏற்கனவே இரண்டு படம் பண்ணியதால் இதை எல்லாம் பண்ண முடியுமா என்று நான் கேள்வியே கேட்கவில்லை. ஏனென்றால் இதை அவரால் பண்ண முடியும். நான் அவரிடம் கேட்ட ஒரேயொரு கேள்வி, சார், இதை யார் தயாரிக்கிறார்கள் என்பது தான். சுபாஷ்கரன் என்றார். அதன் பிறகு சுபாஷ்கரன் பற்றி தெரிந்து கொண்டேன். சிவாஜி படம் எடுக்கும்போது வழக்கமான பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு இருந்தது. படத்தை எடுத்து முடிக்கும்போது இன்னும் அதிகமாகிவிட்டது. எல்லோரும் பயந்தார்கள். தயாரிப்பாளர், வினியோகஸ்தர் என்று அனைவரும் மகிழ்ச்சி அடையும் வகையில் அந்த படம் வசூல் செய்தது.

வசூல்
ரூ. 300 முதல் ரூ. 350 கோடி பட்ஜெட்டில் துவங்கி ரூ. 500 கோடியை தாண்டிவிட்டது. இந்த படம் நிச்சயமாக போட்ட பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு வசூலிக்கும். இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. ஒரு 5 வரியை கூட நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் பல டேக் வாங்கினேன். இதை பார்த்த நான் என்னால் முடியல சார், என்னை விட்டுடுங்க. நான் இதுவரை ஆன பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று ஷங்கரிடம் தெரிவித்தேன். ஆனால் ஷங்கரோ, நீங்கள் இல்லாமல் இந்த படம் இல்லை என்று கூறி என்னை ஊக்குவித்தார்.

தயாரிப்பாளர்
நான் 4, 5 மாதம் ஓய்வில் இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் சொன்னார்கள். நாலு மாசம் இல்லை நான்கு ஆண்டுகள் கூட எடுத்துக் கொள்ளுங்கள். எனக்கு பணம் அல்ல உங்களின் ஆரோக்கியம் தான் முக்கியம் என்றார். சுபாஷ்கரன் ஒரு கோஹினூர் வைரம் போன்றவர். படம் லேட்டானபோது வருமா, வராதா என்று கேட்டார்கள். அது முக்கியம் இல்லை. லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும்; கரெக்ட்டா வந்தா கரெக்ட்டா அடிக்கணும். நான் படத்தை சொன்னேன். இன்னும் ரிலீஸ் மட்டும்தான் பாக்கி. அக்ஷய் குமாரை அந்த கெட்டப்ல பார்த்து அசந்துட்டேன். ரஹ்மான், ஆஸ்கருக்கு ஒரு சேலஞ்ச். டெக்னீஷீயன்ஸ் மற்றஉம் அஸிஸ்டென்ட் டைரக்டர்ஸ் எல்லாருக்கும் நன்றி என்றார் ரஜினி.


Click it and Unblock the Notifications