‘என்னோட பெஸ்ட் லிஸ்ட்டில் லிங்கா இருக்கணும்!' - ரவிக்குமாருக்கு ரஜினியின் அன்புக் கட்டளை
லிங்கா படம் என்னுடைய பெஸ்ட் படங்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என தனது ஆஸ்தான இயக்குநர் கே எஸ் ரவிக்குமாருக்கு அன்புக் கட்டளை போட்டிருக்கிறாராம் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த், சோனாக்ஷி சின்ஹா, ஹன்சிகா, சந்தானம் நடித்து வரும் படம் லிங்கா. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை கே எஸ் ரவிக்குமார் இயக்குகிறார்.

படத்தின் 95 சதவீதப் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், பாடல் காட்சிகளுக்காக ரஜினி, சோனாக்ஷி, அனுஷ்கா மற்றும் படக்குழுவினர் ஐரோப்பிய நாடுகளுக்குப் பறக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்தப் படம் தனது திரையுலக வாழ்க்கையின் சிறந்த படங்களுள் ஒன்றாக இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறாராம்.
இதனை அவர் வெளிப்படையாகவே ரவிக்குமாருக்குக் கூறியுள்ளார்.
'படம் தொடங்கியபோதே, இந்தப் படம் என்னோட பெஸ்ட் லிஸ்டில் ஒன்றா இருக்கணும் .. பாத்துக்கங்க பாஸ்' என்றாராம்.
அதுக்கென்ன சார்.. நிச்சயம் அப்படியே அமையும் என்று உறுதியளித்துள்ளார் ரவிக்குமார்.


Click it and Unblock the Notifications











