தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்க்கிறார் உலகநாயகன் கமல்! - ரஜினியின் பெருந்தன்மை பேச்சு

கும்கி இசை வெளியீட்டு விழாவில் இன்று பங்கேற்ற ரஜினி, கமலை பாராட்டித் தள்ளிவிட்டார்.
கமல் பற்றி அவர் பேசுகையில் 'என் கலையுலக அண்ணா கமல் அவர்களே,' என்றுதான் ஆரம்பித்தார்.
தனது பேச்சில், "சிங்கப்பூர் மருத்துவமனையில் நான் சிகிச்சை பெற்றபோது கமல் என்னை பார்க்க வந்திருந்தார். டாக்டர்கள் சந்திக்க விடாததால் வருத்தத்தோடு திரும்பினார்.
ரஜினியைப் பார்க்க நான் சிங்கப்பூர் போயும், பார்க்க அனுமதிக்கவில்லையே என்று வெளியில் சொல்ல முடியாத சூழலாகிவிட்டதே என கமல் என்னிடம் பின்னர் வருத்தத்துடன் கூறினார். ஐயாம் சாரி கமல்... நான் சென்னை திரும்பியதும் நானே உங்களை வந்து சந்திக்கிறேன் என்று தெரிவித்தேன். சென்னை திரும்பியதும் முதலில் அவரிடம்தான் பேசினேன்.
கமல் மிகச் சிறந்த கலைஞர். அவருக்கு ஹாலிவுட் படத்தை நடித்து இயக்க கமலுக்கு அழைப்பு வந்துள்ளது. அதுவும் சாதாரண தயாரிப்பாளரிடமிருந்தல்ல... லார்ட் ஆப் தி ரிங்ஸ் படத்தைத் தயாரித்த நிறுவனத்திடமிருந்து. இதன் மூலம் தமிழ் திரையுலகுக்கும், இந்தியாவுக்கும் கமல் பெருமை சேர்த்துள்ளார்," என்றார்.
1986-லேயே ஹாலிவுட் படமான ப்ளட் ஸ்டோனில் நடித்தவர் ரஜினி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











