twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இப்போ உள்ள அரசியல் சூழலில் இந்த வரி தேவையா? - இயக்குநரைக் கேட்ட ரஜினி

    By Shankar
    |

    இப்போதுள்ள அரசியல் சூழலில், டூயட் பாடலில் உன்னைவிட தலைவன் யாருமில்லை என்ற வரிகள் அவசியம்தானா? என இயக்குநர் கே எஸ் ரவிக்குமாரைக் கேட்டுள்ளார் ரஜினிகாந்த்.

    லிங்கா படத்தில் ரஜினி - சோனாக்ஷி சின்ஹா பாடும் ஒரு டூயட் பாடலில் "என்னைவிட அழகி உண்டு - ஆனால்
    உன்னைவிட உன்னைவிடத் தலைவன் இல்லை" என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன.

    வைரமுத்து

    வைரமுத்து

    ஆனால் உண்மையில் இந்தப் பாடலில் முதலில் தலைவன் என்பதற்கு பதில் அழகன் என்றுதான் வைரமுத்து எழுதியிருந்தாராம்.

    அழகன் தலைவனான்...

    அழகன் தலைவனான்...

    ஆனால் இயக்குநர் கேஎஸ் ரவிக்குமாரும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானும் அழகன் என்பதற்கு பதில் தலைவன் என்ற வார்த்தையைப் போட்டுக் கொடுங்கள், இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வைரமுத்துவைக் கேட்டுக் கொண்டார்களாம்.

    சம்மதம்

    சம்மதம்

    ஆரம்பத்தில் இதற்கு உடன்படாத வைரமுத்து, பின்னர் சம்மதித்து அவர்கள் கேட்டுக் கொண்டபடி மாற்றித் தந்துள்ளார்.

    தேவையா?

    தேவையா?

    இந்தப் பாடல் பதிவாகி முடிந்ததும் ரஜினிக்கு போட்டுக் காட்டினார்களாம். அப்போது குறிப்பிட்ட வரிகள் வந்ததும், 'இப்போது இருக்கிற சூழலில், 'உன்னைவிட உன்னைவிடத் தலைவன் இல்லை' என்பது தேவையா?' எனக் கேட்டாராம் ரஜினி.

    சரி, ஓகே..

    சரி, ஓகே..

    ஆனால் அவரையும் சமாதானப்படுத்திவிட்டார்களாம் ரஹ்மானும் ரவிக்குமாரும். இப்போது தலைவன் என்ற வார்த்தையுடன்தான் பாடல் வெளியாகிறது.

    English summary
    Rajini has initially objected the word Thalaivan instead of Azhagan in a duet song in Lingaa movie.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X