ரஜினியிடம் எதிர்பார்த்தது ஒன்று, கிடைத்தது ஒன்று: என்னங்க சார் இப்படி பண்றீங்களே

By Siva

Recommended Video

பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினி- வீடியோ

சென்னை: பேட்ட இசை வெளியீட்டு விழாவில் ரஜினியிடம் எதிர்பார்த்தது ஒன்று கிடைத்தது ஒன்றாகிவிட்டது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நேற்று நடந்தது.

விழாவில் ரஜினி அரசியல் பற்றி பேசுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

வேண்டுகோள்

வேண்டுகோள்

மேடைக்கு வந்த உடனே கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டார் ரஜினி. நினைத்துக் கூட பார்க்காத பேரழிவு வந்துவிட்டது. அரசால் மட்டும் தான் நிவாரணம் செய்ய முடியும் என்று நினைத்தால் அது தப்பாகும். எல்லோரும் சேர்ந்து கை கோர்த்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன் என்றார் ரஜினி.

ரசிகர்கள்

ரசிகர்கள்

கஜாவில் ஆரம்பித்து அடுத்து தனது அரசியல் வருகை பற்றி பேசுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தால் எக்ஸ்ட்ரா என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் சொல்லிக் கொடுத்தார் ரஜினி. எக்ஸ்ட்ரா பற்றி அவர் சொன்ன அனைத்துமே மிகச் சரியே. ஆனால் அரசியல் வருகை குறித்து எக்ஸ்ட்ரா அல்ல லிட்டில் அளவுக்கு கூட அவர் பேசாதது தான் வருத்தமே.

விளக்கம்

விளக்கம்

எக்ஸ்ட்ரா பற்றி ரஜினி கூறியதாவது, இந்த எக்ஸ்ட்ரா என்ற வார்த்தை ஒரு மந்திரம். அதை சரியாக நாம் பயன்படுத்தினால் வாழ்க்கை ரொம்ப நல்லா இருக்கும். அது ரொம்ப சிம்பிள். எக்ஸ்ட்ரா பேசக் கூடாது, எக்ஸ்ட்ரா சாப்பிடக் கூடாது, எக்ஸ்ட்ரா தூங்கக் கூடாது, எக்ஸ்ட்ரா புகழக் கூடாது, எக்ஸ்ட்ரா திட்டக் கூடாது, எக்ஸ்ட்ரா அட்வைஸ் பண்ணக் கூடாது. இந்த எக்ஸ்ட்ராவில் நிறைய விஷயம் இருக்கிறது. வயசு ஆக ஆக எக்ஸ்ட்ரா உப்பு சாப்பிடக் கூடாது, எக்ஸ்ட்ரா சர்க்கரை சாப்பிடக் கூடாது, எக்ஸ்ட்ரா நடக்கக் கூடாது, எக்ஸ்ட்ரா யோசிக்கக் கூடாது. எக்ஸ்ட்ராவை சரியாக பயன்படுத்தினால் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாகிவிடும் என்றார்.

அழகு

அழகு

அரசியல் பற்றி எதிர்பார்த்தால் த்ரிஷாவின் அழகின் ரகசியத்தை தெரிவித்தார் ரஜினி. த்ரிஷாவின் அழகின் ரகசியம் என்னவென்று கேட்டேன், யோகா என்றார். யோகா செய்தால் உடலும், உள்ளமும் நன்றாக இருக்கும். மனம் நிம்மதியாக இருக்கும் என்று யோகாவின் பலன்களை அடுக்கிக் கொண்டே போனார் ரஜினி.

நக்ஷத்ரா

நக்ஷத்ரா

எக்ஸ்ட்ரா புகழக் கூடாது என்று ரஜினி கூறியது நேற்றைய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விக்னேஷ்காந்த் மற்றும் நக்ஷத்ராவுக்கு பொருந்தும். நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து முடியும் வரை அவர்கள் இருவரும் ரஜினியை எக்ஸ்ட்ரா இல்ல எக்க்க்க்க்க்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ட்ராவாக புகழ்ந்ததை பார்த்து எரிச்சல் தான் வந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X