அர்னால்டின் ஆசையை நிறைவேற்றுகிறார் ரஜினிகாந்த்!
சென்னை: ஷங்கரின் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வருகை தர ரஜினிகாந்த் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் கவர்னருமான அர்னால்ட் ஷ்வார்ஸ்நெக்கரின் ஆசையை நிறைவேற்றுகிறார் ரஜினி.

ஷங்கரின் ஐ பட இசை வெளியீட்டு விழா மிகப் பிரமாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 15-ம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கர் கலந்து கொள்கிறார். பாலிவுட்டிலிருந்து அமிதாப் பச்சனும் பங்கேற்கிறார்.
இந்த விழாவில் ரஜினி கலந்து கொள்ள வேண்டும் என இயக்குநர் ஷங்கர் பெரிதும் விரும்பினார். அதுமட்டுமல்ல, அர்னால்ட் ஸ்வார்ஷ்நெக்கர் ஒருமுறை, இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஒரு மேடையில் தோன்ற ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்திருந்தார்.
சமீபத்தில் ரஜினியைச் சந்தித்த ஷங்கர் இதையெல்லாம் அவரிடம் கூறி விழாவில் பங்கேற்குமாறு கேட்டுக் கொண்டார்.
உடனே சம்மதம் தெரிவித்த ரஜினி, செப்டம்பர் 15-ம் தேதி நிச்சயம் விழாவுக்கு வருவதாகக் கூறினாராம்.


Click it and Unblock the Notifications











