ஊரே ரஜினி பற்றி பேசிக்கொண்டிருக்க... அவர் அடுத்து என்ன செய்யப் போறார் பாருங்க!
தர்பார் படத்துக்கான டப்பிங் வேலைகளை அடுத்த வாரம் துவக்க உள்ளார் நடிகர் ரஜினி.
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினி தனது தர்பார் படத்துக்கான டப்பிங் வேலைகளை துவங்க உள்ளார்.
ரஜினி எது பேசினாலும் இந்திய ஊடகங்களுக்கு அது தலைப்பு செய்தி தான். பாரதிய ஜனதா தனக்கு காவி சாயம் பூச முயற்சிப்பதாகக் கூறி நேற்று பரபரப்பை கிளப்பினார்.
அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்த ரஜினியின் கருத்து இன்றைய பேசு பொருளாக மாறியுள்ளது. ரஜினிக்கு ஆதரவாகவும், எதிராகவும் பகிரப்படும் கருத்துகளால் சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது.

அடுத்த வேலை
ஊரே அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, ரஜினி தனது அடுத்த வேலையை பார்க்க கிளம்பிவிட்டார். முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள தர்பார் படத்தின் போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

தர்பார் டப்பிங்
தர்பார் படத்தின் டப்பிங் பணிகளை அடுத்த வாரத்தில் ரஜினி துவங்க உள்ளார். நவம்பர் 15ம் தேதி முதல் ஒரே கட்டமாக தர்பார் படத்திற்கான டப்பிங்கை பேசி முடிக்க அவர் திட்டமிட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவா இயக்கும் புதிய படம்
இதையடுத்து தனது அடுத்தப் படத்திற்கான வேலைகளில் ரஜினி ஈடுபட உள்ளார். சிவா இயக்கத்தில் உருவாகும் அந்த படம் ரஜினியின் 168வது படமாகும். மற்றொருபுறம் அரசியல் குறித்த நகர்வுகளும் சத்தமில்லாமல் நகர்ந்து கொண்டிருக்கின்றன.

பொங்கல் ரிலீஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் திரைப்படம் 2020 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. நயன்தாரா, சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இசையில் நேற்று முன்தினம் வெளியான தீம் மியூசிக் மற்றும் மோஷன் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











