Don't Miss!
- News ஆரம்பிக்கும்போதே "மக்கர்" செய்த ஓட்டு மெஷின்.. நாகையில் ஒரு பூத்தில் மாதிரி வாக்குப்பதிவு தாமதம்!
- Sports என்னங்க சொல்றீங்க? சிஎஸ்கேக்கு வருகிறாரா ஆஸி. வேகம் ஹேசல்வுட்.. உண்மை என்ன?
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ரஜினி, விஜய்.. ஒரே கல்லுல நிறைய மாங்காய்... சன் பிக்சர்ஸ்-ன் அதிரடி திட்டம்!
சர்கார் இசை வெளியீட்டு விழாவில் பேட்ட பட டீசர் வெளியிடப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை: சர்கார் மற்றும் பேட்ட பட நிகழ்ச்சிகளை ஒரே சமயத்தில் நடத்தி, ரஜினி மற்றும் விஜயை ஒரே மேடையில் பங்கேற்க வைக்க சன் பிக்சர்ஸ் திட்டமிட்டு வருகிறது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் பேட்ட மற்றும் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் சர்கார் என ஒரே நேரத்தில் இரண்டு பெரிய நடிகர்களின் படங்களைத் தயாரித்து வருகிறது சன் பிக்சர்ஸ்.
ஏற்கனவே சர்கார் படம் பற்றி சில அப்டேட்கள் வெளியாகியுள்ளன.
அதிர வைத்த பேட்ட:
இந்நிலையில் கடந்த வாரம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் தலைப்பு பேட்ட என்பதை சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. கூடவே பேட்ட படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே அந்த போஸ்டரை லட்சக்கணக்கானவர்கள் பார்த்தனர். இதனால் பேட்ட இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது.
பேட்ட டீசர்:
இந்நிலையில், அடுத்த மாதம் 2ம் தேதி சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. அந்த விழாவில் பேட்ட படத்தின் டீசரும் வெளியிடப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சன் பிக்சர்ஸ் திட்டம்:
இரண்டு முன்னணி நடிகர்களின் பட அப்டேட் என்பதால் இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்த சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது. மேலும் அந்த விழாவில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி மற்றும் விஜய் ஆகியோரை ஒரே மேடையில் அமர வைப்பதற்கான வேலைகளும் நடைபெற்று வருகின்றன.
டிஆர்பி கணக்கு:
இது நடைபெற்றால் இந்த நிகழ்ச்சிக்கு ரஜினி மற்றும் விஜய் ரசிகர்கள் என மிகப்பெரிய கூட்டம் வருவது உறுதி. அதோடு இந்நிகழ்ச்சியை சன் டிவியில் ஒளிபரப்பு செய்தால் டிஆர்பியும் எகிறும் என்பது அவர்களது கணிப்பு. ஒரே கல்லுல.. சாரி, ஒரே மேடையில் பல மாங்காய்களை அடிக்கப் பார்க்கிறது சன் பிக்சர்ஸ்.