22 ஆண்டுகளுக்குப் பிறகு மங்களூரில் ரஜினி... லிங்கா வெளியீடு பற்றி அறிவிப்பு!

By Shankar

மங்களூர்: 22 ஆண்டுகளுக்குப் பிறகு மங்களூர் நகருக்கு வருகை தந்தார் ரஜினிகாந்த். லிங்கா படத்தின் வெளியீடு குறித்து செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார்.

3 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி நடிக்கும் புதிய படம் லிங்கா. கேஎஸ் ரவிக்குமார் இயக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்தின் முதல் இரு கட்ட படப்பிடிப்பு கடந்த 70 நாட்களாக மைசூர் மற்றும் ஹைதராபாதில் நடந்து முடிந்தது.

ஷிமோகா

ஷிமோகா

இப்போது இறுதிக்கட்டப் படப்பிடிப்பு கர்நாடக மாநிலம் ஷிமோகாவில் நடைபெறுகிறது. இந்தப் படப்பிடிப்பில் பங்கேற்க ஷிமோகா செல்ல, மங்களூர் நகருக்கு விமானத்தில் வந்தார்.

22 ஆண்டுகளுக்குப் பிறகு

22 ஆண்டுகளுக்குப் பிறகு

அவர் வந்த செய்தி தெரிந்த சில நிமிடங்களில் விமான நிலையத்தில் அவரைக் காண பெரும் கூட்டம் கூடிவிட்டது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் முதல் முறையாக மங்களூர் வருகிறார் ரஜினி.

பேட்டி

பேட்டி

விமான நிலையத்திலிருந்து வேகமாக வந்தவர், செய்தியாளர்களைப் பார்த்ததும் நின்று அவர்களுக்கு பேட்டியளித்தார்.

பிறந்த நாளில்

பிறந்த நாளில்

அவர் கூறுகையில், "லிங்கா படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு ஷிமோகாவில் நடக்கிறது. அதில் கலந்து கொள்ளத்தான் வந்திருக்கிறேன்.

டிசம்பர் 12-ம் தேதி என் பிறந்த நாள். அன்று படத்தை வெளியிட முயற்சிக்கிறோம்' என்றார்.

நலமாக இருக்கிறேன்

நலமாக இருக்கிறேன்

உடல் நிலை பற்றி செய்தியாளர் கேட்டபோது, 'கடவுள் அருளால் நான் நலமாக உள்ளேன். நன்றி," என்றார்.

ஜோக் நீர்வீழ்ச்சிக்கு

ஜோக் நீர்வீழ்ச்சிக்கு

படப்பிடிப்பில் பங்கேற்கும் முன் ஷிமோகாவில் உள்ள புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி, மற்றும் இயற்கைக் காட்சிகளைக் காணச் செல்கிறார் ரஜினி. ஷிமோகாவில் 21 நாட்கள் தங்கியிருப்பார் ரஜினி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X