62வது பிறந்த நாள்- மந்த்ராலயத்தில் ரஜினிகாந்த் வழிபாடு
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இன்று 62வது பிறந்த நாளாகும். இதையொட்டி அவர் கர்நாடக மாநிலம் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரா சாமி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். பின்னர் தர்மஸ்தலாவுக்கும் அவர் செல்கிறார்.
ரஜினிகாந்த்துக்கு இன்று 62வது பிறந்த நாளாகும்.இதை அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து தடபுடலாக கொண்டாடி வருகின்றனர். கோவில்களில் தேர் இழுப்பது, அன்னதானம் வழங்குவது, நலத் திட்ட உதவிகள் வழங்குவது என கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் மந்த்ராலயம் சென்றுள்ளார். அங்குள்ள ராகவேந்திரா சாமி கோவிலில் அவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். ரஜினிக்காக சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தர்மஸ்தலாவுக்குச் சென்று அங்கும் சாமி கும்பிடுகிறார்.
தலைவர்கள், திரையுலகினர், பல்துறையினர் வாழ்த்து
முன்னதாக ரஜினிகாந்த்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பல்துறைப் பிரமுகர்கள் தொலைபேசி மூலமும், வாழ்த்துக் கடிதங்கள் மூலமும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
Comments


Click it and Unblock the Notifications
